உடல் உறுப்புகளைத் தானம் செய்பவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஐந்து நாட்களில் 1377 உடலுறுப்புகளைத் தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர்.
விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலமாக குறைந்தது 5 பேர் பயனடைகிறார்கள். அதன் மூலம் அவர்கள் மறுவாழ்வு பெறுகிறார்கள்.
பொதுவாக தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளைத் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு அதிகமாகவே இருந்து வருகிறது. அதனால் தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் உடல் உறுப்புகளைத் தானம் செய்பவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று கடந்த மாத இறுதியில் திமுக அரசு அறிவித்திருந்தது. அப்படி தானம் செய்த ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பொதுவெளியில் அதிகம் பகிரப்பட்டன.
அதன் விளைவாக கடந்த மாதம் 23-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 1327 பேர் தங்களுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு முன் வந்து அதற்கான அரசின் இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். இது அரசின் முன்னெடுப்புக்கு கிடைத்த நல்ல விளைவு என்று சமூக ஆர்வலர்கள் இதை பாராட்டுகிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...