மாதம் 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இளம் தம்பதி... கனவுத் திட்டத்திற்கு கைகொடுத்த டாடா!


இளம் தம்பதியுடன் ரத்தன் டாடா

இளம் தம்பதிகளின் கனவு திட்டமான புதிய முயற்சியைக் கண்டு வியந்த தொழிலதிபர் டாடா அவர்களுக்கு உறுதுணையாய் விளங்கிவரும் நிலையில் அந்த தம்பதி மாதம் ஒன்றுக்கு 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

அதிதி , சேத்தன் தம்பதி

புனேவைச் சேர்ந்த அதிதி மற்றும் சேத்தன் தம்பதியின் கனவுத் திட்டமான Repos Energy என்ற நிறுவனம், வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு விநியோகம் செய்யும் Swiggy மற்றும் Zomato நிறுவனங்களைப் போல செயலி மூலம் பெட்ரோல் விநியோகம் செய்யும் புதுமையான தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இவர்களது செயலியில் தேவையை பதிவு செய்தால், வீட்டிற்கே பெட்ரோலை விநியோகம் செய்கின்றனர். தற்போது இந்தியாவின் 65 நகரங்களில் இவர்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் மாதம் 70,000 வரையே வருவாய் ஈட்டி வந்துள்ளது இவர்களது நிறுவனம். ஆனால், இவர்களின் திட்டம் மற்றும் செயல்பாடுகள் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவை ஈர்க்க, அவர் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

அதிதி , சேத்தன் தம்பதி

அதன் பின்னர், நிறுவனம் பெரும் வளர்ச்சியை எட்டியது. அதுவரை மாதம் ரூ.70,000 வருவாய் ஈட்டி வந்துள்ள நிலையில், மாதம் 2.2 கோடி வருவாய் என்ற நிலைக்கு உயர்ந்தது. அது மட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் ரூ.65 கோடிக்கு மேல் வர்த்தகம் கண்டுள்ளது இவர்களின் நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.200 கோடி என்றே கூறப்படுகிறது.

ரத்தன் டாடா முதலீடு செய்வதை அறிந்த பின்னர், எல் அண்ட் டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா உட்பட பல முக்கிய நிறுவனங்கள் தற்போது இவர்களின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.

x