2023-24-ல் வரிக்கு பிந்தைய லாபம் ரூ 1,868 கோடி - "என்எல்சி இந்தியா" நிகர லாபம் 31 % உயர்வு


கடலூர்: 2023 - 24 நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துறை வெளியிட்டிருக்கும் விவரங்கள் வருமாறு: 31.03.2024 அன்றுடன் நிறை வடைந்த நிதியாண்டில் (2023-24), என்எல்சி இந்தியா பொதுத்துறை நிறுவனத்தின், வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ரூ. 1,847 கோடியாகும். இது, முந்தைய நிதி ஆண்டுடன் (2022-23) ரூ.1,248 கோடியுடன் ஒப்பிடுகையில், 48 சதவீதம் அதிகம்.31.03.2024 அன்றுடன் நிறைவ டைந்த நிதியாண்டில், வரிக்கு முந்தைய லாபம் (PAT) ரூ. 2,788 கோடியாகும்.

இது, முந்தைய ஆண்டின் ரூ.1,724 கோடியுடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் அதிகம். மேலும், கடந்த10 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இது அதிக பட்ச உயர்வாகும். 31.03.2024 அன்றுடன் முடிவ டைந்த நிதியாண்டில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்புக்கு முந்தைய, நிறுவனத்தின் வருவாய் ஈபிட்டா (Earnings Before Interest,Taxes, Depreciation, and Amortization) ) ரூ. 4, 873 கோடி ஆகும்.இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யபட்ட ரூ. 3,899 கோடியுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகமாகும்.

31.03.2024 அன்றுடன் முடிவ டைந்த நிதியாண்டில் (2023-24), நிறுவனத்தின் மொத்த குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபம் (PAT) ரூ 1,868 கோடியாக உள்ளது. கடந்தாணடு இதே காலகட்டத்தில் பதிவு செய் யப்பட்ட ரூ. 1,426 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும்.

31.03.2024 அன்றுடன் முடிவ டைந்த நிதியாண்டில் நிறுவனக் குழுவின் வரிக்கு முந்தைய லாபம், இழப்பு (PBT) ரூ. 2,882 கோடியாகும். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 2,056 கோடியுடன் ஒப்பிடுகையில் 40 சதவீத வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.

31.03.2024 அன்றுடன் முடி வடைந்த நிதியாண்டில், குழுமத்தின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) மொத்தம் ரூ. 5,556 கோடியாகும். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 4,868 கோடியுடன் ஒப்பிடு கையில், 14 சதவீதம் அதிகமாகும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 15 சதவீதம் இடைக்கால ஈவுத்தொகையுடன் (ஒரு பங்குக்கு 1.5 ரூபாய்) கூடுத லாக, ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 15 சதவீதம் (ஒரு பங்குக்கு 1.5 ரூபாய்) 2023-24 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத் தொகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த பரிந்துரை வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்பு தலுக்கு உட்பட்டதாக இருக்கும்.

என்எல்சி இந்தியா நிறுவனத் தில் கடந்த 31.03.2024 அன்று முடி வடைந்த நிதியாண்டின் முக்கிய சிறப்பம்சங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்)உற்பத்தி 36.32 மில்லியன் டன் (MT) அளவை எட்டியுள்ளது.தலபிரா சுரங்கத்தில், 12.64 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது.

தலபிரா சுரங்கத்தில் இருந்து, 11.76 மில்லியன் டன் நிலக்கரி இதுவரை இல்லாத அளவில் விநியோ கிக்கப்பட்டுள்ளது.பர்சிங்சார் சுரங்கத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 2.10 மில்லியன் டன் பழுப்புநிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள் ளது. முன் எப்போதையும் விட, நெய்வேலி சுரங்கம்-1 ஏ-வில், 5.59 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக் கரிச் சுரங்கங்களின் சிறப்பான செயல்திறனுக்காக, என்எல்சிஐஎல் சுரங்கங்களுக்கு, 13 ஐந்து நட்சத்திர மதிப்பீட்டு விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.

என்எல்சிஐஎல் நிறுவனத்தின் சுரங்கம்-II மற்றும் சுரங்கம்-I ஆகியவை 2020-21 மற்றும் 2021-22 ம்ஆண்டுகளில், நாட்டிலேயே முதலிடத்தை வகிக்கும் சுரங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அனல் மின் நிலையம்-II விரிவாக்கத்தில், ஒரு வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மின் உற்பத்தி 2,153.41 மில்லியன் யூனிட் எட்டப்பட்டுள்ளது. பர்சிங்க்சார் அனல் மின்நிலையத்தில், ஒரு வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1,692.05 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

என்எல்சிஐஎல் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 27.1 பில்லி யன் யூனிட் மின்சாரத்தில், 2.1 பில்லியன் யூனிட், பசுமை மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் (என்என்டிபிஎஸ்) (2x500 மெகாவாட்), அனல் மின் நிலையம்-1 விரிவாக்கம் (2x210 மெகாவாட்) மற்றும் பர்சிங்சார் அனல் மின் நிலையம் (2x125 மெகாவாட்) ஆகி யவை, கொள்திறன் காரணி (PLF) வகையில், இந்தியாவில் இயங்கும் அனைத்து பழுப்பு நிலக்கரி மின் நிலையங்களில், முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. இவ்வாறு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.