ஐந்தில் ஒண்ணு அகப்படுமா?


கே.எஸ்.அழகிரி

ஜூன் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதில் ஒரு இடம் அதிமுகவுக்குப் போக எஞ்சிய 5 இடங்களை திமுக கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது. அதில் ஒன்றை தங்களுக்குத் தரவேண்டும் என 2019 மக்களவைத் தேர்தலின் போதே திமுகவிடம் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு வைத்திருக்கிறது தமிழக காங்கிரஸ். இப்போதுள்ள சூழலில் அன்றைக்குப் பேசியபடி, காங்கிரசுக்கு ஒரு சீட்டை விட்டுக்கொடுக்குமா திமுக என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த ஒரு சீட்டுக்காக தமிழக காங்கிரசில் பலபேர் பந்தல்போட ஆரம்பித்திருக்கிறார்கள். ப.சிதம்பரம், தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என நீள்கிறதாம் அந்தப் பட்டியல். இந்த நேரத்தில் தாங்கள் ஆக்டீவாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈவிகேஎஸ், தங்கபாலு, அழகிரி உள்ளிட்டவர்கள் ஆங்காங்கே கட்சி நிகழ்ச்சிகளில் தலைக்காட்டுவதாகவும் காங்கிரசுக்குள் ஒரு பேச்சு ஓடுகிறது!

x