எஸ்.எஸ்.லெனின்
கவிதை, கதை, குழந்தை, காதல், கனவு... என பூமியில் சுகித்திருக்கும் மனிதனின் வாழ்க்கைப் பயணம் நிலா இல்லாது நிறைவு பெறாது. நிலவுக்கான பயணம் இன்றியும் மனிதனின் விண்வெளி அறிவியல் முழுமை பெறுவதாக இல்லை.
நிலவில் நீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன்-1 உறுதி செய்ய, அடுத்தக்கட்ட வாய்ப்புகளை ஆராய சந்திராயன்-2 விண்கலம் ஜூலை மத்தியில் ஏவப்பட உள்ளது. நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கும் இந்தியாவின் இந்த அறிவியல் பயணம் உலக நாடுகளை வாய்பிளக்க வைத்திருக்கிறது.
நீர் ஐயத்தை நேர்செய்த சந்திராயன்-1