மயக்கும் அதிமுக வாக்கு வங்கி... கொங்குவைப் பங்குபோடும் பாஜக!


கா.சு.வேலாயுதன், இரா.கார்த்திகேயன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை வென்றெடுத்த பாஜக, இந்த முறை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளையும் குறிவைக்கிறது. காரணம், இங்கெல்லாம் தங்களோடு கூட்டணி சேர்வார்கள் என பாஜக பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுகவின் பலமான வாக்கு வங்கி!

கோவையில் 1989, 1991 மக்களவைத் தேர்தல் களில் தனித்துப் போட்டியிட்டே சுமார் 50 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி பாஜக. 1998-ல் கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இங்கு முதல் வெற்றி கிட்டியது. அதிமுக துணையுடன் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் எம்பியானார். 13 மாதங்களில் வந்த அடுத்த தேர்தலில் திமுக துணையுடன் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஆரே வெற்றிவாகை சூடினார். அப்போதிருந்தே ‘கோவை பாஜகவின் கோட்டை’ என்ற கோஷத்தைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கிவிட்டது பாஜக. ஆனாலும் அதற்குப் பிறகு வந்த மூன்று தேர்தல்களிலும் பாஜகவால் இங்கு கரையேற முடியவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு கோவையின் மீதான காதல் கொஞ்சமும் குறைய வில்லை. வரும் தேர்தலில் பாஜக -அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்துகின்றன தொடர் அரசியல் நகர்வுகள். அதனால், கோவை மட்டுமல்லாது திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளிலும் சேர்த்தே கண் வைக்கிறார்கள் பாஜக பிரபலங்கள். ஒருவேளை, அதிமுக கூட்டணிக்குள் வராவிட்டாலும் கோவையில் பாஜக அசுர வேகத்தில் களமிறங்கும் என்கிறார்கள்.

கோவை தொகுதியில் இந்த முறையும் சிபிஆரே நிற்பார் எனச் சொல்லப்பட்டாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்ற வானதி சீனிவாசன் ஒரு வருடமாகவே கோவையைச் சுற்றி வருகிறார். அவர் மீதான விளம்பர வெளிச்சமும் கோவைக்குள் அதிகமாகவே தெரிகின்றன. இதையெல்லாம் பார்த்துவிட்டு, மணிவிழா, விருந்து என சிபிஆரும் பாஜகவினரைத் தனக்காக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கோவை ஈச்சனாரியில் பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், கோவை மக்களவைத் தொகுதிகளுக்கான சக்தி கேந்திர சம்மேளனத்தை நடத்தினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது வானதி சீனிவாசன் முன்னிலைப்படுத்தப்பட்டார். சிபிஆர் இந்த

x