மஹாபாரத காலத்திலேயே இணையம்?


மஹாபாரத காலத்திலேயே இணையம்?

மஹாபாரத காலத்திலேயே இணையம் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாக திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் கூறிய கருத்தால், சென்ற வார ட்விட்டர் உலகம் கலகலப்பானது.  மத்திய அமைச்சர்கள் இப்படிப்பட்ட கருத்துகளைக் கூறி தொடர்ந்து சமூக ஊடகங்களில் நகைப்புக்கு ஆளாகிவருகின்றனர். ஏற்கெனவே, அமைச்சர் சத்யபால் சிங், ‘சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு அறிவியல்ரீதியாக தவறானது’ என்று கூறியதற்காக ‘ட்ரோல்’ செய்யப்பட்டார். அந்த வரிசையில் திரிபுரா முதல்வரும் தற்போது இணைந்திருக்கிறார்.

பாரம்பரியம் போற்றுவோம்!

சர்வதேச பாரம்பரிய தினம்உலகம் முழுவதும் ஏப்ரல் 18அன்று கடைபிடிக்கப்பட்டது. இந்தத் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இந்தியர்கள் #WorldHeri-tageDay  என்ற ஹேஷ்டேக்கில் பாரம்பரியச் சின்னங்களின் படங்களை ட்விட்டரில் அதிகளவில் பகிர்ந்திருந்தனர். இந்தியாவில், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 36 பாரம்பரிய இடங்கள் இருக்கின்றன. பாரம்பரிய இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

x