பிளஸ் 2 முடித்தவர்​கள் 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் படிப்​புக்கு விண்ணப்பிக்கலாம்: உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் அறிவிப்பு


சென்னை: பிளஸ் 2-வில் வணி​க​வியல் உட்பட அனைத்து பாடப்​பிரிவு மாணவர்​களும் பாலிடெக்​னிக் டிப்​ளமா நேரடி 2-ம் ஆண்​டில் சேர (லேட்​ரல் என்ட்​ரி) தொழில்​நுட்​பக்​கல்​வித்​துறை அனு​மதி வழங்​கி​யுள்​ளது. பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் 3 ஆண்டு கால பொறி​யியல் டிப்​ளமா படிப்​பு​கள் வழங்​கப்​படு​கின்​றன. இதில் எஸ்​எஸ்​எல்சி தேர்ச்சி பெற்​றவர்​கள் சேரலாம்.

அதோடு லேட்​ரல் என்ட்ரி முறை​யில், பிளஸ் 2 முடித்த மாணவர்​கள் நேரடி​யாக 2-ம் ஆண்டு சேர்க்​கப்​படு​கிறார்​கள். அவர்​கள் பிளஸ் 2 வில் கணிதம், இயற்​பியல், வேதி​யியல் பாடங்​களை படித்​திருக்க லேண்​டும். அதே​போல், எஸ்​எஸ்​எல்சி முடித்​து​விட்டு 2 ஆண்​டு​கள் ஐடிஐ படித்​தவர்​களும் லேட்​ரல் என்ட்ரி முறை​யில் நேரடி​யாக 2-ம் ஆண்டு சேரலாம்.

இந்​நிலை​யில், வணி​க​வியல் உட்பட எந்த பாடப்​பிரிவு படித்​திருந்​தா​லும் பாலிடெக்​னிக் கல்​லூரி​யில் லேட்​ரல் என்ட்ரி முறை​யில் நேரடி​யாக 2-ம் ஆண்டு சேரு​வதற்கு தொழில்​நுட்பக்கல்​வித்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தொழில்​நுட்பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து அரசு, அரசு உதவி​பெறும் மற்​றும் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிளஸ் 2 தேர்​வில் வணி​க​வியல் உட்பட அனைத்து பாடப்​பிரிவு​களி​லும் தேர்ச்சி பெற்ற மாணவர்​களை​யும் 2025-26-ம் கல்வி ஆண்​டில் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்​பில் (டிப்​ள​மா) சேர்க்கை செய்​து​கொள்ள அனைத்து வகை பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்​கும் அனு​மதி வழங்​கப்​படு​கிறது.

x