[X] Close

ஆரோக்கியத்தை காக்கும் கடலை மிட்டாய்க்கு 100 வயது: விழிப்புணர்வால்...வளர்ச்சி பெறும் சிறுதொழில்


100-age-for-kadalai-mittai

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 11:01 am
  • அ+ அ-

 

வி.சீனிவாசன்

கடந்த. 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரோக்கியத்தை ஊட்டி வளர்த்த, குழந்தைகள் விரும்பும் திண்பண்டமாக இருந்த கடலைமிட்டாய், கல்கோனா, எள் உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, பர்பி, கம்மர்கட் ஆகியவை நூறாவது ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது.

நவீன கால மாற்றத்தின் கோரப்பிடியாலும், விளம்பர மற்றும் வியாபார யுக்தியாலும் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள் தற்போதைய குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்து, உயிரை விலை பேசி வருகிறது.

காந்திக்கு பிடித்த வேர்க்கடலை

இந்நிலையில், தமிழ்நாடு மிட்டாய் தயாரிப்பாளர்கள் சங்கம் கடலைமிட்டாய், கடலை உருண்டை, எள் உருண்டை என வெல்லம் கொண்டு தயாரிக்கும் திண்பண்டங்கள் நூறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். தேசத்தந்தை காந்திக்கு மிகவும் பிடித்த கடலை பருப்பில் தயாராகும் இந்த திண்பண்டங்களின் பின்னணியில், உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும் அடங்கியிருப்பதே, இன்றளவும் இதற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதற்கான ரகசியம்.

இதுகுறித்து சேலம் கன்னங் குறிச்சியில் கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனம் நடத்தி ஆர்.பரமேஸ்வரன், ஆர்.மனோகரன் கூறியதாவது:

இக்கால குழந்தைகளுக்கு மட்டுமல்ல முதியவர்கள், கர்ப்பிணி கள் என அனைத்து தரப்பு மக்களும் உண்ணக்கூடிய திண்பண்டமாக கடலைமிட்டாய் உள்ளது. கடலை யில் குழந்தைகளுக்கு தேவையான புரத சத்து மிகுந்துள்ளது. இதில், கெட்ட கொழுப்பு இல்லாததால், யார் வேண்டுமானாலும் விரும்பி சாப்பிடலாம். வெல்லத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், தோல் வலிமைக்கான சத்துக்கள் என நிறைந்துள்ளன.

சத்துக்கள் அதிகம்

இயற்கையாக கிடைக்கக் கூடிய பேரீட்சை பழத்திலும், வெல்லத்தில் மட்டுமே இரும்பு சத்து அதிகளவு உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் ஆசிட் கடலைமிட்டாய், கடலை உருண்டையில் இருப்பதால், அவர்களுக்கும் ஏற்ற திண்பண்டம்.

இயற்கையான முறையில் விளையும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த திண்பண்டங்கள், நமது பாரம்பரிய உணவு பொருளாகவும், நமது உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான திண்பண்டமாக உள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருப்பவர்களும் கடலை உருண்டைகளை வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் குறுசிறு தொழிலாகவும், குடிசை தொழிலாகவும் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். நூறு ஆண்டை கடந்து விட்ட கடலை மிட்டாய் திண்பண்டம் பெண்களுக்கான சுய வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதில் முன்னணியில் உள்ளது.

மாற்றத்தால் வளர்ச்சி

சிறிய அளவில் வீடுகளில் இருந்து தயாரித்து, பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்கின்றனர். அந்நிய நாட்டு தயாரிப்பான ஜங்க்ஃபுட் மூலம் கெடு பலனை அறிந்து விழிப்புணர்வு பெற்ற பெற்றோர்கள், கடலைமிட்டாய், எள் உருண்டை, பர்பி உள்ளிட்டவற்றை குழந்தை களுக்கு வாங்கி கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், இத்தொழில் வளர்ச்சியை நோக்கி வெற்றி நடை போடுகிறது.

பள்ளி விழாக்கள், திருமணம், பிறந்த நாள் விழா, சுதந்திர தினம், குடியரசு தினத்தில் கடலைமிட்டாய் வகைகளை மொத்தமாக வாங்கி மகிழ்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close