[X] Close

பெருமையான தருணம்: ஐபிஎஸ் மகனுக்கு ‘சல்யூட்’ அடித்து சேவை செய்த கான்ஸ்டபிள் தந்தை


constable-father

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 28 Oct, 2018 21:57 pm
  • அ+ அ-

ஐபிஎஸ் முடித்த தனது மகன் மாவட்டத்துக்கு போஸீஸ் எஸ்பியாக வந்தநிலையில், அவருக்கு சல்யூட் அடித்து கான்ஸ்டபிளாக இருக்கும் அவரின் தந்தை சேவை செய்த சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஜனார்தன் சிங். லக்னோவில் உள்ள விபூதி காந்த் போலீஸ் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் அனூப் குமார். இவர் 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்றினார்.

இந்நிலையில், கடந்த நேற்று முன்தினம் லக்னோ வடக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக அனூப் குமார் நியமிக்கப்பட்டார். விபூதி காந்த் போலீஸ்நிலையத்தின் சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் மரியாதை அணிவகுப்பில், தனது மகன் அனூப்குமாருக்கு அவரின் தந்தை ஜனார்த்தன் சல்யூட் அடித்து மரியாதை செய்தது நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.

இது குறித்து கான்ஸ்டபிள் ஜனார்த்தன் கூறுகையில், அனூப் குமார் எனக்கு அதிகாரி, அதன்பின்புதான் எனக்குமகன். நான் என் அதிகாரிக்கு சல்யூட் செய்தேன். அவரின்உத்தரவுகளை மதிப்பேன். என்னுடைய நோக்கம் உறவுகள் வேலையை ஒருபோதும் பாதித்துவிடக்கூடாது என்பதுதான் என்று தெரிவித்தார்.

போலீஸ் எஸ்பி. அனூப் குமார் கூறுகையில், என்னுடைய உயர்வுக்கு என்னுடையதந்தைதான் காரணம். நான் தினமும் என்னுடைய பணியை தொடங்கும் முன் வீட்டில் இருந்து கிளம்புகையில் என் தந்தையின் காலைத் தொட்டு வணங்கிதான் புறப்படுகிறேன்.

அவரின் கொள்கைபடியே வாழ விரும்புகிறேன். என்னை ஒருபோதும் என்தந்தை படி அல்லது விளையாடு என்று கூறியதில்லை. எந்தக் காரியத்தையும் முழுமனதோடு செய் என்று மட்டும் அடிக்கடி கூறுவார். ஒரு தோட்டக்காரராக மாற விரும்பினால்கூட, ஒவ்வொரு செடியையும்கவனத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறுவார்.

பாரபங்கியில் நானும், எனது தங்கையும் படிக்கும் போது இருவரையும் சைக்கிளில் கொண்டுபோய் எனது தந்தை பள்ளியில் சேர்ப்பார். மிகுந்த கஷ்டத்தில், பணநெருக்கடியில்தான் எங்களை வளர்த்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்.

என்னுடைய படிப்பில் ஒருபோதும் இடையூறு ஏற்படாதவாறு சரியான நேரத்தில் கட்டணத்தைச் செலுத்தி, புத்தகங்களை வாங்கிக்கொடுத்தார். இருவரும் வெவ்வேறு திசைகளில் பணியாற்றிலும் ஒரேவீட்டில்தான் வசிக்கிறோம், இரவில் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம் எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close