[X] Close

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ரூ.11.65 லட்சம் செலவில் தேக்குமர மாட்டு வண்டி பயணம்: கண்ணமங்கலம் அருகே பட்டு நெசவாளி அசத்தல்


cow-race

மாட்டு வண்டியில் வலம் வரும் பட்டு நெசவாளர் மார்கபந்து.

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 15:11 pm
  • அ+ அ-

 

இரா.தினேஷ்குமார்

விஞ்ஞான உலகின் வேகத்தில், தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ள மனித இனம் அதி வேகமாக ஓடுகிறது. மனிதர்கள் தங்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும் பயண வசதி களுக்காகவும் கண்டு பிடிக்கப் பட்டதுதான் நவீன ரக வாகனங்கள். மிதிவண்டியில் தொடங்கிய மனித இனத்தின் பயணம், தற்போது ஆடி காரையும் தாண்டிவிட்டது. வாகனங்களின் மதிப்பு கோடி ரூபாயை கடந்தாலும், மனித இனம் கவலைப்படவில்லை.

அதனால், வாகனங்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் உற்பத்தியை போட்டிப் போட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் அதிகரித்துக்கொண்டே இருக் கின்றன. அதன் விளைவு, காற்று மாசடைந்து, சுவாசிக்க முடியாமல் மனித இனத்தின் வாழ்க்கை முடிவை நோக்கி அதி வேகமாக நகர்கிறது.

இந்தச் சூழ்நிலையில் ‘சுற்றுச் சூழலை பாதுகாத்து, தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுத்து’ அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் பட்டு நெசவாளர் மார்கபந்து களம் இறங்கி உள்ளார்.

பழைய நாகரீகத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றும் கூறலாம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தடையின்றி சுழன்ற சக்கரம், மீண்டும் சூழல தொடங்கியுள்ளது. இரண்டு சக்கரங்களுடன் இரட்டை மாடுகளின் 8 கால்களும் மின்னலாக சீறுகிறது. முந்தைய காலத்தில் ஜமீன்தாரர்கள், மிராசுதாரர்கள், நாட்டாமைகள் போன்றவர்கள் பயன்படுத்திய ‘இரட்டை மாட்டு வண்டியை’ ரசனையுடன் வடிவமைத்துள்ளார் மார்கபந்து. இதற்காக அவர் செலவிட்ட தொகை ரூ.11.65 லட்சம் என்றாலும், தமிழர் பண்பாடுகளில் ஒன்றான, மாட்டு வண்டி பயணத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த முயற்சி எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

இது குறித்து தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணு புரம் கிராமத்தில் வசிக்கும் பட்டு நெசவாளர் மார்கபந்து கூறும் போது, “சிறுவயதில் படவேடு அம்மன் கோயிலுக்கு இரட்டை மாட்டு வண்டியில் தந்தையுடன் செல்வேன். அப்போது, எங் களுக்கு சொந்தமாக மாட்டு வண்டி கிடையாது. 50 பைசா கொடுத்துதான் பயணிக்க வேண் டும். அதை கொடுக்க முடியாமல், மாட்டு வண்டியில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டுள்ளேன். அப் போது எனது மனதில், நாமும் இரட்டை மாட்டு வண்டி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்த கால கட்டத்தில் வசதியில்லை. பின்னர் குடும்பம், பிள்ளைகள் என்று உருவான பிறகு பண நெருக் கடி ஏற்பட்டது. ஆனாலும், மாட்டு வண்டி வாங்கவேண்டும் என்ற எனது கனவு என் விழிகளை விட்டு அகலவில்லை. காலம் உருண் டோடியது.

பட்டு நெசவு மற்றும் விவசாயம் செய்து வரும் நான், சிறுக, சிறுக சேமித்த தொகையைக் கொண்டு தேக்கு மரங்களை வாங்கினேன். இப்போதைய காலத்துக்கு ஏற்ப இரட்டை மாட்டு வண்டி செய்யும் தச்சரை தேடினேன். ஒரு மாத தேடுதலுக்குப் பிறகு, சேலத்தைச் சேர்ந்த தச்சர் சங்கரன் என்பவர் மூலம் 9 மாத உழைப்பில் இரட்டை மாட்டு வண்டி தயாரானது. மாட்டுவண்டியை நேர்த்தியாக தயாரிக்க மட்டும் ரூ.9 லட்சம் செலவானது. மேலும், கரூர் அருகே உள்ள பூஞ்சை தாழியூர் கிராமத்தில் வசிக்கும் காங்கேயம் காளைகளை வளர்ப்பதில் விருது பெற்ற நடராஜன் என்பவரிடம் இருந்து ரூ.2.20 லட்சம் மதிப்பி லான 2 காங்கேயம் காளைகளை வாங்கினேன். காளை மாடுகள் மற்றும் இரட்டை மாட்டு வண்டியை எனது கிராமத்துக்கு கொண்டு வந்து பயன்படுத்துகிறேன். என்னுடைய, 45 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.

சிறு வயதில் மாட்டு வண்டி யை ஓட்டிய அனுபவம் உள்ளது. இப்போது மாட்டு வண்டியை ஓட்டுவதற்கு பழகி வருகிறேன். ஜல்லிக்கட்டுக்கு உயிர் கொடுத்ததுபோல், மாட்டு வண்டி பயணத்துக்கு உயிர் கொடுத்து இளைய தலைமுறை யிடம் கொண்டு சேர்க்க வேண் டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்காக, கோயில் திரு விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களுக்கு குடும் பத்துடன் மாட்டு வண்டியில்தான் சென்று வருகிறேன்.

தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை பார்க்கும்போது மாட்டு வண்டி பயணம் மகிழ்வாக இருக்கிறது. ஆரணியில் இருந்து வேலூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வர பெட்ரோலுக்கு ரூ.100 செலவிட வேண்டும். இரண்டு நபர்கள் மட்டுமே செல்ல முடியும். அதே நேரத்தில் மாட்டு வண்டியில் 6 பேர் பயணிக்கலாம்” என்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close