[X] Close

ஏன் பஸ்ஸை எடுக்கலைன்னு கேட்டா.. வடிவேலு ஸ்டைலில் பதில் சொல்லியிருக்கிறார்!


bad-time-puts-brakes-on-bus-service

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Oct, 2018 15:14 pm
  • அ+ அ-

இன்னிக்கு வைகைப் புயல் வடிவேலுவின் பிறந்தநாள். இப்ப நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்றேன். அதில் அப்படியே வடிவேலுவைப் பொருத்திக் கொள்ளுங்கள். சிரிப்பு கேரண்டி.

பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வி.எஸ்.யோகேஷ் என்ற ஓட்டுநர் கடந்த மாதம் 1-ம் தேதி காலை பணிக்குத் திரும்பவில்லை. காலை 6.15 மணி பேருந்தை அவர் எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் பேருந்தை எடுக்கவில்லை. எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் அந்த ட்ரிப் தடைபட்டிருக்கிறது. பேருந்து வராதது குறித்து பயணிகளும் புகார் சொல்லியிருக்கின்றனர்.

இதனையடுத்து வண்டியை எடுக்காதது ஏன் என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு யோகேஷ் அளித்த விளக்கம் அதிகாரிகளை அதிர வைத்திருக்கிறது.

"நான் ஆகஸ்ட் 31-ம் தேதி பிரபல ஜோதிடரைப் பார்த்தேன். அவர் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். ராகுகாலத்தில் பேருந்தை எடுக்க வேண்டாம் என கூறியிருக்கிறார். என் ஜாதகப்படி காலை 6.15 முதல் 7.35 மணிக்குள் நான் பஸ்ஸை எடுத்தால் நிச்சயம் விபத்து ஏற்படும் அதில் குறைந்தது 15 உயிர்களாவது பலியாகும் என்று ஜோதிடம் சொல்லியிருக்கிறார். 

பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு என்னால் பண நஷ்டம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அந்த ஜோதிடர் கணிப்பு எனக்கு எப்போதும் பலித்திருக்கிறது. அதற்காகவே நான் பேருந்தை அன்றைய தினம் எடுக்கவில்லை" என அவர் விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த விளக்கத்தைக் கேட்ட அதிகாரிகளுக்கு தலை சுற்றியிருக்கிறது. இப்படி ஒரு விளக்க நோட்டீஸ் வந்ததை பிஎம்டிசி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையை வேலையில் சுணக்கம் காட்டுவதற்கு காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளனர்.

இந்த செய்தியைப் படிக்கும்போது என் மனதில் வடிவேலுதான் திரிந்தார். அந்த பச்சைக்கிளி கண்ணுக்குள்ளேயே திரியிறான்.
வடிவேலுவுக்கு பஸ்ஸுக்கும் அவ்வளவு நெருக்கம் பார்த்திபனுடன் வெற்றிக்கொடிகட்டு படத்தில் தெறிக்கவிட்டிருப்பார் வடிவேலு. அதேபோல் இன்னொரு படத்தில் பஸ்ஸை விலை பேசுவார் கேட்டால் அதன் பின்னால் 'இது உங்கள் சொத்து' என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுவார். 

எங்க அண்ணன் தமிழ்நாட்டுல இந்த பஸ் இல்ல எந்த பஸ் -லயும் உக்கார மாட்டாரு என்று அல்வா வாசு சொல்லும்போது பிரேக் அடிக்கப்பட்டு வெளியே தூக்கி எறியப்படும் வடிவேலுவை மறக்க முடியுமா? இல்ல கன்டக்டரா வந்து பயணிகளுடன் படாது பாடு படுவதைத்தான் நினைக்காமல் இருக்க முடியுமா?

அதனால்தானோ என்னவோ இந்த செய்தியைப் படித்ததும் வடிவேலு நினைவுக்கு வந்துவிட்டார்.

சில வடிவேலு பஸ் காமெடி சீன்கள்:


இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் பஸ் க்ளீனராக வடிவேலு அடித்திருக்கும் லூட்டியோ அபாரம்.நினைத்தாலே சிரித்துவிடுவீர்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close