[X] Close

சிவாஜிக்கு துப்பாக்கி பரிசு! (நடிகர்திலகம் 90)


sivaji-90

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 11:59 am
  • அ+ அ-

சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் - 1.10.2018

தொகுப்பு : மானா பாஸ்கரன்

21. சிவாஜிகணேசன்  பெற்ற விருதுகள்: . 1960-ல்  கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில்   சிறந்த நடிகருக்கான விருது.  தமிழக அரசின் கலைமாமணி விருது 1962 - 1963. பத்ம ஸ்ரீ விருது-  1966. பத்ம பூஷன் விருது 1984. செவாலியர் விருது 1995.   தாதாசாகெப் பால்கே விருது 1996.

22. ‘ராஜராஜ சோழன்’படம் பார்த்துவிட்டு  இப்படி எழுதியிருந்தார் எழுத்தாளர் சுஜாதா: ராஜராஜ சோழன், சிவாஜி கணேசனாக நடித்த,'ராஜராஜ சோழன்’  படம் பார்த்தேன் -

23. சிவாஜிகணேசன் 9 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்கள்: பெம்புடு கொடுக்கு (1953) தால வன்சானி வீருடு (1957) பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (1960) பவித்ர பிரேமா (1962) ராமதாசு (1964) பங்காரு பாபு (1972) பக்த துகாரம் (1973) .... சிவாஜி சானக்ய சந்திரகுப்தா (1977) விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)

24. உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டும்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பி, கொண்டு வந்திருக்கிறேன்.   கட்டபொம்மன்‘  பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா? இவ்வாறு சிவாஜியை தங்கத் தமிழில் புகழாரம் சூட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

25. அப்பர், சுந்தரர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆன்மிகப் பெரியவர்களை பாமரர்களும் அறியும்படி செய்தது சிவாஜி நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம். 

26. சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

 27. 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

28. படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

29. பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

30. சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

- தொடரும்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close