[X] Close

உலக சுற்றுலா நாள் இன்று: இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்கள்


spiritual-destinations

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 17:01 pm
  • அ+ அ-

ஒவ்வொரு வருடம் லட்சக்கணக்கான மக்கள், தத்தமது நம்பிக்கையின் படி, ஆன்மிகத் தலங்களை வழிபட்டு, அமைதியைத் தேடி வருகின்றனர். வழிபாட்டு இடங்களும், அதைச் சுற்றியிருக்கும் அமைதியான சூழலும், சுய பரிசோதனைக்கான வாய்ப்பைத் தருகிறது. உலக சுற்றுலா நாளான இன்று, இந்தியாவின் பிரபலமான, முக்கிய ஆன்மிகத் தலங்களைப் பற்றிப் பார்ப்போம். 

பொற்கோயில்

உலகம் முழுவதிலிருந்தும் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஒரு தலம். சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. சகோதரத்துவத்துக்கும் சமத்துவத்துக்கும் சின்னமாக விளங்கும் இடம். செம்பு மற்றும் பளிங்கினால் ஆனா இந்தக் கோயில் பிரகாரங்களும், மஹாராஜா ரஞ்சித் சிங்கால் 1830-ல் நிறுவப்பட்ட தங்கத்தால் ஆன உட்புறமும் பிரம்மிக்க வைக்கும். அதிலும் இரவு நேரத்தில் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்தக் கோயிலைப் பார்ப்பது நம் கண்களுக்கு விருந்து. ஒவ்வொரு நாளும், இனம், மொழி, மதம் கடந்து கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு இங்கு அன்னதானம் நடைபெறுகிறது. 

 

கோனார்க் 

கோனார்க் சூரிய கோயில், சூரிய கடவுளின் பெரிய ரதத்தைக் குறிக்கும் பொருட்டு, அந்த வடிவத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஜோடி கல் சக்கரங்களும், 7 குதிரைகளும் இந்த வடிவத்தில் அடக்கம். ஒட்டுமொத்தமாக இதன் கல் சிற்பங்களுக்கு புகழ்பெற்ற தலம் இது.

 

திருமலை திருப்பதி

திருமலை பாலாஜி மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இந்தக் கோயில் தன் பக்தர்களை, பிரம்மாண்டத்துண்ட வரவேற்று, அதே நேரத்தில் அமைதியான சூழலையும் தருகிறது. திருமலை மொத்தமுமே பக்தியும், ஆன்மிகமும் வழிந்தோடும். பாலாஜியின் கம்பீரமான தோற்றமும், கோயிலின்  கட்டிடக்கலையம்சமும் பார்ப்பவர்கள் மனதை ஈர்த்துவிடும். 

 

ரிஷிகேஷ்

எண்ணற்ற ஆசிரமங்களையும், யோக மையங்களையும் உடைய ரிஷிகேஷ், அமைதி மற்றும் அறிவைத் தேடுபவர்களை கவர்ந்திழுக்கிறது. முக்கியமாக ஆன்மிகத் தேடலில் இருக்கும் அயல்நாட்டினர்கள் மத்தியில் இந்த இடம் மிகப் பிரபலம். ஹரித்வார் இந்து யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம். ரிஷிகேஷ், ஹரித்வார் இரண்டுக்கும் நடுவில் பயண தூரம் குறைவு என்பதால் ஒரே சுற்றுலா திட்டத்தில் இரண்டையும் பார்ப்பது பலரது வழக்கம். 

 

வாரனாசி

ஒவ்வொரு நாள்லும் கங்கைக்கு நன்றி சொல்லி, ஆராதிக்கும் பொருட்டு, தசவசுவமேத படித்துறையில் நடைபெறும் கங்கா ஆரத்தி கண்ணைக் கவரும் சடங்கு. அழகான ஒருங்கிணைப்போடு நடக்கும் இந்த ஆரத்தி ஒரு நடனத்தைப் போல இருக்கும். பிராட்வே நாடகங்களின் ஆன்மிக வடிவம் இது என்றும் இதைக் கூறுவார்கள். இந்த ஆன்மிக நகரத்தின் சிறப்பே, இங்கு நடக்கும் பல சடங்குகள், எல்லோருக்கும் தெரியும்படி, வெளிப்படையாக, கங்கையின் கரைகளிலேயெ நடப்பதுதான். 

 

அஜ்மீர் ஷரீஃப் தர்கா

தேசத்தின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று. அதிக மக்களால் விரும்பப்படும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றும் கூட. இந்த தர்காவுக்கு வருபவர்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப்படுவதாகவும், அவர்கள் ஆசைகள் நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது. பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும், ஒரே கூரையின் கீழ் இறைவனை வணங்குவதைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். 

- ஏ.என்.ஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close