[X] Close

அறம் பழகு: தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்யும் தாய்; திக்குவாய்ப் பிரச்சினை- தத்தளிக்கும் சிவகாசி மாணவரின் படிப்புக்கு உதவலாமே!


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 15:12 pm
  • அ+ அ-

-க.சே.ரமணி பிரபா தேவி

தந்தை இல்லை, கூலி வேலைக்குச் செல்லும் தாய், வறுமையில் குடும்பம், தனக்குத் திக்குவாய் பிரச்சினை. இத்தனை இடர்களுக்கிடையில் திறமையுடன் படித்து எம்.ஐ.டி.யில் சேர்ந்திருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த மதுசூதனன். ஆனால் இப்போது, தனது பொறியியல் இரண்டாமாண்டு படிப்புக்குக் காசில்லாமல் காத்திருக்கிறார்.

 

கடின உழைப்பாளியான தந்தை கோபாலகிருஷ்ணன் எதிர்பாராத விதமாக, 2012-ல் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். தாய் வனஜா தனது இரண்டு மகன்களைக் கரை சேர்க்க, தீப்பெட்டித் தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறார். கிடைக்கும் வருமானம் அன்றாடத் தேவைகளுக்கே சரியாக இருக்கிறது.

 

ஒற்றை ஆளாய் தாய் படும் பாட்டை அறிந்த மதுசூதனன், கடினமாக உழைத்து பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் பெற்றார். 12-ம் வகுப்பில் 1,143 மதிப்பெண்கள். அண்ணா பல்கலைக் கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) இடம் கிடைத்தது. அங்கு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினீயரிங் (E&I) சேர்ந்தார் மதுசூதனன். பதற்றமானால் மற்றவர்களின் சரியாகப் பேச முடியாமல் திக்கிப் பேசும் நிலையுடனே, இதைச் சாதித்தார்.

 

அக்கம் பக்கத்தில் புரட்டி, கல்விக் கடன் வாங்கி முதலாமாண்டு கல்லூரிக் கட்டணத்தைக் கட்டியாகிவிட்டது. தற்போது இரண்டாவது ஆண்டின் கட்டணத்துக்குப் பணமில்லை.

 

இதுகுறித்துத் தயக்கத்துடன் மதுசூதனன் பேசும்போது, ''அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். அம்மாவை ரொம்ப சிரமப்படுத்தக் கூடாதுன்னு தெளிவா இருந்தேன். பத்தாவதுல 490-க்கு மேல வாங்கினதால, 11, 12-ம் வகுப்பு படிக்க ரொம்ப கம்மியாதான் செலவாச்சு. தொடர்ந்து அண்ணா யுனிவர்சிட்டிலயே இடம் கிடைச்சுருச்சு. ஆனாலும் செமஸ்டர் ஃபீஸ், ஹாஸ்டல், மெஸ் ஃபீஸ் கட்ட வேண்டியிருக்கு.

1.png 

யாராவது ஹெல்ப் பண்ணாங்கன்னா, கண்டிப்பா நல்லபடியா படிச்சு அடுத்த நிலைக்கு வந்துருவேன். வேலைக்குப் போனபிறகு அம்மாவ நல்லாப் பார்த்துக்கணும்; பார்த்துப்பேன்'' என்கிறார்.

 

கூலி வேலையில் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்பதால் வீட்டுக்கு வந்தபிறகும் வேலை செய்கிறார் வனஜா. இதுகுறித்துக் கண்களில் நீர் கசிந்தவாறே பேசுகிறார். ''எனக்கு ரெண்டு பையங்க. பெரியவன் மது. சின்னவன் 11 போறான். கஷ்டப்பட்டுத்தே ரெண்டு பேரையும் படிக்க வைக்குறேன். தூரத்து சொந்தங்க கொஞ்சம் உதவி பண்ணாங்க.

இப்போ அவங்கனாலையும் முடியல. நைட்டும் பகலும் வேல பார்ப்பேன். சாயந்தரம் வேலை முடிச்சுட்டு வருவேன். பட்டாசுக் கடைக்காரங்க பேப்பரும் பசையும் குடுப்பாங்க. 10, 11 மணி வர உக்காந்து அதை ஒட்டிக் கொடுப்பேன். பசங்க எது குடுத்தாலும் சாப்பிட்டுக்குவாங்க. சின்னப் பையனும் கூட வேலை பார்ப்பான்.

எனக்கு எம்பசங்க படிச்சா போதும்மா. வேற எதுவும் வேணாம்'' என்கிறார் வனஜா.

 

பொறியியல் படிப்பின் 3-வது செமஸ்டருக்கான கட்டணம்- ரூ.4,215

ஹாஸ்டல், மெஸ் கட்டணம் - ரூ.24,250

இதைக் கட்டுவதற்கான கடைசித் தேதி- ஜூன் 16, 2019.

 

*

மதுசூதனனின் தாய் வனஜாவின் தொடர்பு எண்: 9585791624

அவரின் வங்கிக் கணக்கு எண்:  Madhusudhanan G

Acc. No: 6669600277

IFSC code: IDIB000C028

Chromepet, Chennai.

-க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close