[X] Close

அறிவியல் மேஜிக்: பாட்டிலுக்குள் மேகம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 11:42 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

உங்களால் பாட்டிலுக்குள் மேகத்தைக் கொண்டு வரமுடியுமா என்று நண்பர்களிடம் கேளுங்கள். ‘முடியாது’ என்பார்கள். ‘முடியும்’ என்று இந்த மேஜிக்கைச் செய்து காட்டுங்கள். (பெரியவர்களின் முன்னிலையில் செய்ய வேண்டும்).

என்னென்ன தேவை?

2 லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்

தீப்பெட்டி

சூடான நீர்

எப்படிச் செய்வது?

# பாட்டிலில் மூன்றில் ஒரு பாகத்துக்குச் சூடான தண்ணீரை நிரப்புங்கள்.

# மூன்று தீக்குச்சிகளை ஒன்றாகக் கொளுத்தி, அதை பாட்டிலுக்குள் போடுங்கள்.

# புகை வெளியேறாமல் இருக்க, பாட்டிலின் மூடியை மூடுங்கள்.

# இப்போது பாட்டிலின் நடுப்பகுதியில் கைகளை வைத்து நான்கு, ஐந்து முறை நன்றாக அமுக்குங்கள்.

# கடைசியாக பாட்டிலை அமுக்கிவிட்டு, மெதுவாகக் கைகளை விடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பாட்டிலுக்குள் புகையானது மேகம்போல வந்துவிட்டதா?

# பாட்டிலை அமுக்கும்போது அந்த மேகம் மாயமாகிவிடும். கையைவிடும்போது மேகம்  தெரியும். பாட்டிலுக்குள் மேகம்போல புகை மூட்டம் உருவானது எப்படி?

காரணம்

பாட்டிலுக்குள் சூடான நீர், ஆவியாகி உள்ளுக்குள் இருக்கும் காற்றில் நீராவியைச் சேமிக்கிறது. பாட்டிலுக்குள் உள்ள புகைத்துகள்களைச் சுற்றி நீர் மூலக்கூறுகள்  கூட்டமாக உருவாகின்றன.

கண்ணுக்குத் தெரியாத இந்த நீர்மூலக்கூறுகள் கருவாகச் செயல்பட்டு புகைமூட்டம் உருவாகக் காரணமாகின்றன. இந்தப் புகைதான் பாட்டிலுக்குள் மேகத்தைபோல உருவாகிறது.

பயன்பாடு

வளிமண்டலத்தில் உள்ள  தூசுத் துகள்களைச் சுற்றி உருவாகும் நீர்ப்படிகங்களின் கூட்டமே மேகங்கள் எனப் படித்திருப்பீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close