[X] Close

ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: வெளிநாட்டில் உதவித்தொகையுடன் கல்வி


  • kamadenu
  • Posted: 21 May, 2019 17:16 pm
  • அ+ அ-

-சாதனா

தலித் மாணவர்களுக்கான பிரத்யேகத் திட்டம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற நிதி உதவி அளித்துவருகிறது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை. ஏதேனும் ஓர் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்ற எஸ்.சி. பிரிவு மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

2019 ஏப்ரல் 1 அன்று 35 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஆறு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்குத் தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்துடன் அமெரிக்கா அல்லது பிரிட்டனில் உயர்கல்வி பயில்வார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 மே 2019

விண்ணப்ப விவரங்களுக்கு: http://www.b4s.in/Vetrikodi/NOS1

வாராங்கல் என்.ஐ.டி. – ல் ஆராய்ச்சியாளர் ஆகலாம்!

வாராங்கலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. பி.டெக். சிவில் இன்ஜினீயரிங் மற்றும் வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினீயரிங் அல்லது ரிமோட் சென்சிங் பிரிவில் எம்.டெக்./எம்.இ./எம்.எஸ்.

முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதத்துக்கு ரூ. 31 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம்வரை மூன்றாண்டுகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுபோக வாராங்கல் என்.ஐ.டி.யில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26 மே 2019

விண்ணப்ப விவரங்களுக்கு: http://www.b4s.in/Vetrikodi/NWJ2

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close