[X] Close

ஆங்கில​ம் அறிவோமே 265: திடீரென்று கிடைக்கும் சொத்து!


265

  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:07 am
  • அ+ அ-

-ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரேஒரு கேள்வி

“The quick brown fox jumps over the lazy dog.  இந்த வாக்கியத்தின் சிறப்புப் புரிகிறதா?”

நண்பரே,  pack my box with five dozen liquor jugs இந்த வாக்கியத்தின் சிறப்பு என்னவோ அதே சிறப்பு நீங்கள் கேட்ட வாக்கியத்திலும் உள்ளது.  இந்த இரண்டு வாக்கியங்களையும் ஏற்கெனவே அறிந்திராதவர்கள் இரண்டுக்கும் பொதுவான அம்சம் என்ன என்பது குறித்து யோசிக்கலாமே.

“Mole என்றால் மச்சம் என்று தெரியும்.  ஆனால், இந்தச் சொல்லுக்கு வேறு ஏதோ பொருளை ஒரு ஆங்கிலப் புதினத்தில் பயன்படுத்தி இருந்தார்கள்.  கொஞ்சம் விளக்கமுடியுமா?’’

வாசகர்களே, இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும்போது அந்த ஆங்கில வாக்கியத்தை முழுமையாக எழுதி அனுப்பினால் மேலும் தெளிவு கிடைக்கும் -  எனக்கும் உங்களுக்கும்.

ஒரு நாட்டின் ஒற்றனை mole என்று குறிப்பிடலாம்.  ஒற்று வேலைக்காக அவரை அனுப்பிய நாட்டின் பாதுகாப்புத் துறையில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.  Secret Agent, Spy போன்றவை இதற்கு இணையான சொற்கள்.

Lecturer என்பவருக்கும், Professor என்பவருக்கும் என்ன வேறுபாடு?

Lecturer என்பவர் வகுப்பில் பாடம் கற்பிப்பவர் - விரிவுரையாளர்.  அவர் பொதுவாக ஒப்பந்த ஊழியராக இருப்பார்.  ஆராய்ச்சிப் பணிகளை அவர் செய்வதில்லை.

கல்வி கற்பித்தலின் மிக உச்சமான பதவி Professor.  அவர் குறிப்பிட்ட கல்விப் பிரிவில் டாக்டரேட் பெற்றிருப்பார்.  பல வருடப் பயிற்சி அனுபவத்தோடு  தன் பாடத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருப்பார். மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதோடு டாக்டரேட் பெறுவதற்காக அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்.  இதனால்தான் பல பேராசிரியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொள்வதைவிட Professor என்று போட்டுக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.

கே.ஒ.கே. தொடர்பான விளக்கம் - அந்த இரண்டு வாக்கியங்களிலும் ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன.

“Many happy returns of the day என்கிறோமே.  Much more happy returns of the day என்று ஏன் சொல்லக் கூடாது?’’

நண்பரே.  Much என்பதும், more என்பதும் ஒரே பொருள் கொண்டவை.  எனவே, இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியதில்லை.  தவிர more என்பதற்கு முன் சேர்த்தாக வேண்டும் என்றால் அது many என்பதாக இருக்க வேண்டும். Count செய்யக் கூடியவற்றை many என்றும், எண்ண முடியாதவற்றை much என்றும் குறிப்பிட வேண்டும்.  Many note books, much water, much love, many happy returns of the day.

“We did good in the examination” என்று ஒருவர் கூறினால் இது சரியா?

நண்பரே, My brother speaks good என்று கூறலாமா?  The software runs good on this computer எனலாமா?  இதுபோன்ற இடங்களில் good என்பதற்குப் பதிலாக well என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும்.  அதாவது ஒன்று எப்படி இயங்குகிறது அல்லது ஒருவர் எப்படிச் செய்தார் என்பதைக் குறிக்க well என்ற சொல்தான் சரி.

Good என்பது மனிதர்களையோ பொருள்களையோ விளக்கப் பயன்படும் ஒரு சொல்.  She scored good marks.  He is a good person.  That is a good point.

2.JPG 

தொடக்கம் இப்படித்தான்

‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’ என்பார்கள்.  இது தற்செயலாக நடக்கும் ஒரு நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் வாக்கியம்.

Windfall என்பதும் தற்செயலானது தான்.  எதிர்பாராதது என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும்.

சிறிதும் எதிர்பாராதபோது பணம் கிடைத்தாலோ, வேறு ஏதாவது சாதகமான விஷயம் நடைபெற்றாலோ அது windfall.

1540-க்களிலேயே windfall என்ற சொல் அறிமுகமாகிவிட்டது.  ‘திடீரென்று கிடைக்கும் சொத்து’ என்ற பொருளில் இது பயன்பட்டது.

காற்று வேகமாக வீசினால் மரத்திலுள்ள கனிகள் கீழே விழலாம்.  அந்தக் கனிகள் எதிர்பாராமல் நமக்குக் கிடைப்பவை.  இந்தப் பொருளில்தான் windfall என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

 

சிப்ஸ்

# Take  off என்றால் எடுத்துக்கொள்வதா, விடுவிப்பதா?

விரைவாகப் புறப்படுவது. Airplane Take off.

# Rhythm என்றால்?

இசையில் இடம்பெறும் சீரான தாளம்.

# Twirl என்றால் என்ன?

சுற்றுதல் -  கொஞ்சம் வேகமாகவும், மீண்டும் மீண்டும். Leaves twirled through air but there was no breeze. She twirled in delight to show off her new dress.

 

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close