[X] Close

கருத்துக் கணிப்புகள் 90 சதவீதம் பொய்த்துப் போயுள்ளன: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி


90

  • kamadenu
  • Posted: 20 May, 2019 14:37 pm
  • அ+ அ-

-செ.ஞானபிரகாஷ்

கருத்துக் கணிப்புகள் 90 சதவீதம் பொய்த்துப் போயுள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து புறப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை இன்று (திங்கள்கிழமை) புதுச்சேரி வந்தடைந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளித்தார். இதில் அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட நினைவு ஜோதி இன்று இரவு ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "தேர்தல் கணிப்புகள் நாட்டில் உள்ள 80 கோடி மக்களில் 5 லட்சம் பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தலின்போது வந்த கருத்துக் கணிப்புகள் 90 சதவீதம் பொய்த்துப் போனது.

ஆதலால், தற்போது வந்துள்ள கருத்துக் கணிப்பு குறித்து ஏதும் கூற முடியாது. கருத்துக் கணிப்புகள் பல்வேறு மாநிலங்களில் நம்ப முடியாத அளவுக்கு வந்துள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே முழுமையான முடிவுகள் தெரியவரும்" என நாராயணசாமி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close