[X] Close

‘பெப்ஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்த விவசாயிகள்’


  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:39 am
  • அ+ அ-

-சிறப்புச் செய்தியாளர் (தி இந்து ஆங்கிலம்)

லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கை பயிர் செய்த விவகாரத்தில் பெப்ஸி நிறுவனம் உருளைக்கிழங்கு விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டது.

 

தற்போது இந்த விவகாரம் சட்ட எல்லைகளிலிருந்து நகர்ந்து அரசின் நடவடிக்கைகள் என்ற பிரதேசத்துக்கு இந்த விவகாரம் மாறியுள்ளது.

 

இந்த விவகாரத்தில் தங்களது வெற்றி என்று பெப்ஸி வழக்கு வாபஸைக் கொண்டாடும் குஜராத் உருளை விவசாயிகள், மத்திய மாநில அரசுகள், விதை பன்மை பதிவுகளெல்லாம் விவசாயிகள் உரிமைக்குட்பட்டதாக மாற்றப்பட வேண்டும் என்று தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் பிராண்டட் வெரைட்டியை தங்களால் விற்க முடியாது என்கின்றனர்.

 

அகமதாபாத் கோர்ட்டில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு மற்றும் 5 விவசாயிகளுக்கு எதிராக மொதாசா மாவட்ட கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றை பெப்ஸி நிறுவனம் வாபஸ் பெற்றது.  மேலும் பெருவிவசாயிகள், வர்த்தகர்கள் மீது தொடுக்கப்பட்ட தீசா கோர்ட் வழக்கையும் பெப்ஸி நிறுவனம் வாபஸ் பெற்றது.

 

இது குறித்து பெப்ஸி நிறுவனம் கூறும்போது, அரசு தரப்பினரிடம் பேசிய பிறகு விவசாயிகள் தொடர்பாகவும் விதைப் பாதுகாப்பு குறித்து நீண்டகால சமாதானத் தீர்வு வேண்டும் என்று பெப்ஸி விரும்புகிறது என்று கூறியுள்ளது.

 

4 விவசாயிகள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் கூறும்போது, “விவசாயிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததற்கு பெப்ஸி நிறுவனம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இது ஒருவிதமான அச்சுறுத்தல், ஆனால் விவசாயிகள் நிறுவனத்திடம் சரணடைய மறுத்து விட்டனர்” என்றார்

 

“விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதைச் சாக்காக வைத்துக் கொண்டு இந்திய அரசு விவசாயிகளின் சட்ட நிலைமைகள் குறித்து எந்த ஒன்றையும் கூறாமல் நடவடிக்கை எடுக்காமல் ஒரு தீய மவுனத்தில் உறைந்துள்ளது. விவசாயிகளின் விதைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இப்போது நிறுவனம் இது போன்ற வழக்குகளைத் தொடர முடியாது என்பது தெளிவாகியுள்ளது.” என்று  விவசாயிகளின் விதை இறையாண்மையைக் காக்கும் புதிய அமைப்பு பீஜ் அதிகார் மஞ்ச் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 

பாரதிய கிசான் சங்கத்தின் கபுபாய் சவுத்ரி கூறும்போது, “சட்டம் தெளிவாக உள்ளது. விவசாயிகளின் உரிமைகளை அரசு செயல்படுத்துவது அவசியம். மேலும் அரசு, பெப்சி நிறுவனத்திடம் இது போன்ற அச்சுறுத்தல், மிரட்டல் உத்திகளை இனி கடைபிடிக்க மாட்டோம் என்று எழுதி வாங்க வேண்டும்.

 

மேலும் பெப்ஸியுடனான அரசின் பேச்சுவார்த்தை என்னவாக இருந்தாலும் அதனை விவசாயிகள் ஏற்கப்போவதில்லை, ஏனெனில் அந்தப் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகள் பிரதிநிதித்துவம் இல்லை. மேலும் இத்தகைய விவாதங்களுக்கே இங்கு இடமில்லை. நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற வேண்டுமென்ற ரீதியில் குஜராத் அரசு விவசாயிகளை அணுகுமெனில் அது முடியாத காரியம். அப்படிச் செய்தால் நம் மண்ணின் சட்டத்தை விவசாயிகள் மத்தியில் தவறாக அரசு வழிநடத்துகிறது என்றே பொருள்  என்று விவசாயச் சங்கத்தினர் ஒன்று திரண்டுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close