[X] Close

அறிவியல் மேஜிக்: மேலே செல்லும் தண்ணீர்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 11:25 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

குளிர்ந்த நீரைச் சூடாக்கும்போது கையை வைத்து பார்த்திருக்கிறீர்களா? மேல்புறம் சூடாகவும் அடிப்பாகத்தில் சூடு சற்றுக் குறைவாகவும் இருக்கும். இதற்கு என்ன காரணம்? ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடுவோமா? (பெரியவர்கள் முன்னிலையில் சோதனையைச் செய்ய வேண்டும்.)

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர்கள் 2, சூடான நீர்,

குளிர்ச்சியான நீர், ஊதா மை, காகித அட்டை, ஆணி

எப்படிச் செய்வது?

# காகித அட்டையின் நடுவில் ஆணியைப் பயன்படுத்தி ஒரு துளையைப் போட்டுக் கொள்ளுங்கள். நீர் வரும் அளவுக்குத் துளை இருக்க வேண்டும்.

# இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில் சூடான நீரை விளிம்புவரை ஊற்றுங்கள்.

# அதில் ஊதா மையை 2 - 4 துளிகள் விட்டு கலக்குங்கள். சூடான நீர் ஊதா நிறத்தில் மாறிவிட்டதா?

# இரண்டாவது டம்ளரில் குளிர்ச்சியான நீரை விளிம்புவரை ஊற்றுங்கள்.

# இப்போது காகித அட்டையை குளிர்ந்த நீருள்ள டம்ளரின் மேலே வையுங்கள்.

# அந்த டம்ளரை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து, சூடான நீர் உள்ள கண்ணாடி டம்ளர் மீது வையுங்கள். இரண்டு டம்ளர்களுக்கும் நடுவே காகித அட்டை இருக்கும்.

# இரண்டு டம்ளர்களும் இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காக கையை வைத்து அழுத்த வேண்டாம். இரண்டு டம்ளர்களின் வாயும் சம அளவில் இருக்கும்படி பார்த்துகொண்டாலே போதும்.

# இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஊதா மை கலந்த சூடான நீர் குளிர்ந்த நீருடன் கலக்கிறதா? புவியீர்ப்பு சக்திக்கு எதிராகச் சூடான நீர் மேல் நோக்கிச் செல்கிறதா? கீழே உள்ள சூடான நீர், மேலே சென்று கலந்தது எப்படி?

skjasuygv.JPG 

காரணம்?

சூடான நீரைவிடக் குளிர்ந்த நீரின் அடர்த்தி அதிகம். அடர்த்தி உள்ள குளிர்ந்த நீர் கீழே உள்ள டம்ளரை நோக்கிச் சென்று, சூடான நீரைச் சிறிய நீருற்றுபோல மேலே தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக குளிர்ந்த நீரைவிடச் சூடான நீரின் அடர்த்தி குறைந்துவிடுகிறது.

இதனால், சூடான நீர் மேலே எழுந்து கலக்கிறது. (நீரைச் சூடாக்கும்போது மூலக்கூறுகள் விலகிவிடுவதால் சூடான நீரில் அடர்த்தி குறையும் என்ற அறிவியல் உண்மையையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.)

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close