[X] Close

சீறிப் பாய வருகிறது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்


200

  • kamadenu
  • Posted: 06 May, 2019 11:49 am
  • அ+ அ-

ஹீரோ நிறுவனம் ஒரே வாரத்தில் மூன்று தயாரிப்புகளை களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே எக்ஸ்பல்ஸ் மாடலில் இரண்டு வாகனங்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை ரூ. 98,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலான எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மாடலைக் காட்டிலும் இது ரூ. 7,600 அதிகமாகும். வாகனங்களில் சவுகர்யம் மற்றும் தனித்துவ அடையாளத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் எல்இடி முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் உள்ளன. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இது 199.6 சிசி திறன் கொண்டது. இது 18.4 ஹெச்பி வேகத்தை 8 ஆயிரம் ஆர்பிஎம் வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. 17.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுதிறனை 6,500 ஆர்பிஎம் வேகத்தில் வெளிப்படுத்தும்.

இது வழக்கமான கார்புரேட்டரைக் கொண்ட 5 கியர் மோட்டார் சைக்கிளாக வந்துள்ளது. ஏர் கூல்டு, 2 வால்வு யூனிட்டுகள் உள்ளன. முன்பக்கத்தில் 276 மி.மீ. டிஸ்ட் பிரேக்கும், பின் பகுதியில் 220 மி.மீ. டிஸ்க் பிரேக்கும் உள்ளன.  இது சுஸுகி ஜிக்ஸர் எஸ்எப் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது சிவப்பு, பிரவுன், கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close