[X] Close

ஞெகிழி பூதம் 14: மேலும் சில ஞெகிழிப் புத்தகங்கள்


14

  • kamadenu
  • Posted: 04 May, 2019 12:15 pm
  • அ+ அ-

-கிருஷ்ணன் சுப்ரமணியன்

Life Without Plastic

ஞெகிழி இல்லாத வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்த உதவும் கையேடு. மேற்கத்திய வாழ்க்கை முறையில், ஞெகிழியின் பயன்பாடு இந்திய வாழ்க்கைமுறையைவிடப் பல மடங்கு அதிகம். அந்தப் பின்னணியில் ஒவ்வொரு ஞெகிழிப் பொருளுக்கும் மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தி, அதைச்  சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியின்தேடலே இந்தப்புத்தகம்.

ஜே சின்ஹா, சந்தால் பிளமான்டன், பேஜ் ஸ்ட்ரீட் வெளியீடு

How to Give Up Plastic

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கிரீன்பீஸ் சர்வதேசச் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் கடல் சார்ந்த சூழல் சீர்கேடுகளுக்கான குழுவின் தலைவர். நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் சலவைத் தூள், சோப்பு, ஷாம்பூ, தண்ணீர் பாட்டில் போன்றவை கடலை எப்படி மாசுபடுத்துகின்றன. அதனால் கடல் உயிரினங்களும் நிலத்தில் உள்ள உயிரினங்களும் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதை இப்புத்தகம் விளக்குகிறது. நமது வாழ்க்கை முறையில் ஞெகிழியைக் கைவிடும் உத்திகளையும் விவரிக்கிறது.

வில் மெக்கல்லம், பென்குவின் லைப்

Plastic Ocean

இந்த நூல் ஆசிரியர் கடல் ஆராய்ச்சியாளர். பசிபிக் கடலில் ஒரு இடத்தில் மிகப் பெரிய குப்பைப் படலம் இருப்பதை யதேச்சையாக ஒரு பயனத்தின்போது கண்டறிந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதை ஆராய்ச்சி செய்து, உலகுக்குப் பல முக்கியச் செய்திகளைக் கொடுத்தவர். அவருடைய அனுபவங்களையும் ஞெகிழியின் கோரத்தன்மையையும் நமக்கு எளிதாக உணர்த்தும் முக்கியமான புத்தகம் இது.

கேப்டன் சார்லஸ் மூர், காசண்ட்ரா பிலிப்ஸ், அவெரி வெளியீடு

supplement1.jpg 

No More Plastic

உங்கள் தினசரி வாழ்க்கையில் ஞெகிழியைக் குறைப்பது கடினமல்ல. வெறும் இரண்டே நிமிடங்களில் நீங்கள் சில மாற்றங்களைச் செய்துவிடலாம். வீட்டில், அலுவலகங்களில், எப்படி நெகிழியின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதை எளிமையாக விளக்குகிறது. குடும்பத்தோடு சேர்ந்து படிக்க வேண்டிய புத்தகம் இது.

மார்டின்டோரே, ஈபரிபிரெஸ்

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close