[X] Close

ஆங்கில​ம் அறிவோமே 261: டம்ப்ளரும் கிளாசும் ஒன்றல்ல


261

  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 11:11 am
  • அ+ அ-

-ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒரு கேள்வி

“கண்ணாடியால் செய்யப்பட்ட டம்ளரை glass என்றும், எவர்சில்வர் அல்லது வெள்ளியால் உருவானதை tumbler என்றும் குறிப்பிடுகிறார்கள், சரிதானே?’’

நண்பரே, அது அப்படியல்ல. Tumble  என்ற சொல்லிலிருந்து உருவானது tumbler. Tumble என்றால் எளிதில் உருள்வது.

Tumbler என்பது கீழ்ப்புறம் சிறுத்தும், மேற்புறம் அகன்றும் காணப்படும் ஒன்று.  உள்ளே எதையும் நிரப்பாமல் அடிப்பக்கம் கீழே இருக்கும்படி (கொஞ்சம் அலட்சியமாக) வைத்தால் tumbler கீழே விழுந்து உருளும்.  (எனவே glass tumblers-ம் உண்டு).

******************

“Ragbag என்றால் என்ன?’’

துணிகளைத் தைக்கும்போது மீந்துபோன துணி ‘பிட்’களைப் போட்டு வைக்கும் பையை ragbag என்பார்கள். என்றாலும், நடைமுறையில் பலவிதமான பொருள்கள் ஒரே இடத்தில் இருப்பதை ragbag என்கிறார்கள். உருவகமாக This is a ragbag of compromises என்பதுபோலும் பயன்படுத்துவதுண்டு.

இப்படிப் பலதும் ஓரிடத்தில் இருப்பதை அல்லது காணப்படுவதை     pot pourri, assortment, mlange, mixture என்றெல்லாம் அழைப்பதுண்டு.

பிரிட்டனில் பேச்சு வழக்கில் சிறிதும் பொருத்தமற்ற உடையை அணியும் பெண்மணியையும் ragbag என்பதுண்டு.

******************

“Mule, ass, donkey ஆகியவை எல்லாமே ஒன்றுதானா?’’

வாசகரே, ass என்பதும், donkey என்பதும் கழுதையைக் குறிக்கும் சொற்கள்.  Mule என்பது கலப்பினம்.  ஆண் கழுதையும், பெண் குதிரையும் இணைவதால் உண்டாகும் உயிரினம். Donkeysகளால் இனப்பெருக்கம் செய்ய முடியும்.  Mulesகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

english 2.jpg 

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் பணியாற்றும் ஒருவர் எனக்கனுப்பிய ஒரு மின்னஞ்சலில் “According to me its too late to make changes” எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் ஏதோ நினைவிலும் அப்படி எழுதி இருக்கலாம்.  ஆனால், அதில் உள்ள தவறைப் புரிந்துகொள்வது நல்லது. அந்த வாக்கியத்தில் ‘its’ என்ற சொல் இடம்பெற்றிருக்கக் கூடாது. அது it’s என்றுதான் இருந்திருக்க வேண்டும். It’s என்பது it is என்பதைக் குறிக்கிறது. Its என்றால் அது ‘அதனுடைய’ என்ற பொருளைக் குறிக்கிறது.

The horse was nearing and he could hear its footsteps.  It’s none of your business.

******************

“M/s. என எழுதுகிறார்களே இதன் பொருள் என்ன?’’

Mr. என்பதன் பன்மை Messrs.  இதை M/s. என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். Ms. மற்றும் Mrs. ஆகியவற்றின் பன்மை உங்களுக்குக் வியப்பைத் தரக்கூடும்.  Ms. என்பதன் பன்மை Mses.  Mrs. என்பதன் பன்மை Mmes.

போட்டியில் கேட்டுவிட்டால்?

You cannot do it here.  It is __  by law.

(a)  prescribed

(b)  proscribed

(c)  against

(d)  disliked

(e)  liked

‘ஒன்றை நீங்கள் செய்யக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறீர்கள்.  காரணம் சட்டம் அதை அனுமதிப்பதில்லை’.  கொடுத்துள்ள வாக்கியத்தின் பொருள் இதுதான்.

Prescribed என்றால் பரிந்துரைக்கப் பட்டது.  பரிந்துரைக்கப்பட்ட செயலைச் செய்வதில் எந்தத் தடையும் இருக்காது.

Disliked by law என்பது பொருந்த வில்லை. சட்டம் என்பது தெளிவாக வரையறுப்பதுதான்.  இதைச் செய்யலாம்,  இதைச் செய்யக் கூடாது என்று அது கூறும்.  அவ்வளவே.  மற்றபடி சட்டத்துக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்பது சரியல்ல.

`Limited by law என்பதும் முழுவதுமாகப் பொருந்தவில்லை. அதாவது ஓரளவுவரை ஏதோ அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்ற பொருள் வருகிறது. ஆனால், வாக்கியத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு செயலைச் செய்யக் கூடாது என்ற பொருள் வருகிறது.

Proscribed, against இரண்டுக்குமான அர்த்தம் வாக்கியத்தில் பொருந்துகிறது (proscribe என்றால் தடை செய்யப்பட்ட).  ஆனால், against by law என்ற சொற்கட்டமைப்பு தவறானது (against law என்று இருக்கலாம்). எனவே,  You cannot do it here.  It is proscribed by law என்பதே சரியான விடை.

 

சிப்ஸ்

« All of a sudden என்பது சரியா? அல்லது all of the sudden என்பது சரியா?

 All of a sudden என்பதுதான் சரி.

« Little, a little என்ன வித்தியாசம்?

 முறையே ‘கிட்டத்தட்ட இல்லை, குறைவாக’.

« Deeply என்பதன் எதிர்ச்சொல் என்ன?

Deep என்பதன் எதிர்ச்சொல் shallow.  Deeply என்பதன் எதிர்ச்சொல்லாக superficially என்பதைக் குறிப்பிடலாம்.

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close