[X] Close

ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா திட்டம்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:00 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் முற்றிலுமாக முடங்கிவிட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் சிலவற்றை குத்தகை எடுக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ தலைவருடன் ஏர் இந்தியா தலைவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெட் ஏர்வேஸ் கடன் சுமையாலும் லாபம் ஈட்ட முடியாத காரணத்திலும் கடந்த புதன் கிழமை முதல் முற்றிலுமாக விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. எஸ்பிஐ தலைமையிலான நிர்வாக சீரமைப்பு குழுவும் ஜெட் ஏர்வேஸை மீட்க வழி கிடைக்காமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸின் பெரிய அகலமான அளவு கொண்ட விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 16 பெரிய அகலமான விமானங்கள் உள்ளன. அவற்றில் பத்து போயிங் 777-300ERs ரக விமானங்களும், ஆறு ஏர்பஸ் A330s ரக விமானங்களும் அடங்கும். இதில் ஐந்து போயிங் ரக விமானங்களை குத்தகை எடுக்க விரும்புவதாக ஏர் இந்தியா தலைவர் அஷ்வானி லொஹானி எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விமானங்களை சர்வதேச பயண வழித்தடங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏர் இந்தியா சர்வதேச வழித்தடங்களுக்கு விமான சேவைகள் வழங்குவதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், ஏர் இந்தியாவிடம் போதுமான விமானங்கள் இல்லை. எனவே ஜெட் ஏர்வேஸ் விமானங்களைக் குத்தகை எடுப்பது உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை அவர் திட்டமிட்டுள்ளார். அஷ்வானி லொஹானி இதுதொடர்பாக ரஜ்னிஷ் குமாரை நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும், சந்திப்பு டெல்லியில் நடக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெட் ஏர்வேஸ் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா மட்டுமே நீண்ட தூர சர்வதேச வழித்தடங்களுக்கு, குறிப்பாக லண்டன், பாரிஸ், நியூயார்க் சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற வழித்தடங்களுக்குச் சேவைகளை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close