[X] Close

காங். வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:13 am
  • அ+ அ-

முன்னணி தொழிலதிபர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு கோருவது அரிது. ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில், நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு கோரி உள்ளார்.

மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியுடன் கோட்டக் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த உதய் கோட்டக் தோன்றுகிறார்.

அந்த வீடியோவில் முகேஷ் அம்பானி பேசும்போது, “தெற்கு மும்பை தொகுதியில் 10 ஆண்டுகள் (2004-2014) எம்.பி.யாக இருந்தவர் மிலிந்த் தியோரா. அவருக்கு இப்பகுதியின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரம் பற்றி ஆழமான அறிவு உள்ளது என நம்புகிறேன். தெற்கு மும்பையின் மனிதர் மிலிந்த்.

மும்பையில் குறுந்தொழில் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை செழிக்க மிலிந்த் தியோரா பாடுபடுவார். இதன்மூலம் திறமையான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்” என கூறுகிறார்.

உதய் கோட்டக் பேசும்போது, “மிலிந்த் தியோரா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த முரளி தியோரா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் மும்பைக்கும் இடையே நீண்ட காலமாக தொடர்பு உள்ளது. எனவே, மும்பைவாசிகளின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் மிலிந்த்” என கூறுகிறார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close