[X] Close

நாடு முழுவதும் 95 தொகுதிகளில் நடந்த 2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு


95-2-66

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:08 am
  • அ+ அ-

மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72% வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக தமிழகம் 38, புதுச்சேரி 1, கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தர பிரதேசம் 8, பிஹார், ஒடிசா, அசாமில் தலா 5, சத்தீஸ்கர், மேற்குவங்கம் தலா 3, காஷ்மீர் 2, மணிப்பூரில் 1 என மொத்தம் 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் 2-ம் கட்டமாக 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேற்குவங்கம், மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதர மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 95 மக்களவைத் தொகுதிகளில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 66 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து மாநிலங்களில் இருந்தும் முழுமையான தகவல் கிடைத்த பிறகு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

23-ம் தேதி 3-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் 26, கேரளா 20, கர்நாடகா 14, மகாராஷ்டிரா 14, உ.பி.10, பிஹார், மேற்குவங்கத்தில் தலா 5 உட்பட மொத்தம் 115 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close