[X] Close

வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு தடை: பாதுகாப்பிடம் ஏற்படுத்தாததால் வீட்டில் வைத்துவர அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 07:12 am
  • அ+ அ-

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிடம் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த உலகில், செல்போனின் பயன்பாடு மிகுதியாகிவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு நிகழ்வையும் செல்போனில், ‘செல்பி’ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது இளைய தலைமுறையினரின் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிகழ்வுகளில் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாக்க வசதியில்லை

வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில், வாகனம், பிரச்சாரம் ஆகியவற்றுக்கு தடை உள்ள நிலையில், செல்போன் பயன்பாடும் தடைக்குள்ளாகியுள்ளது. மேலும், செல்போன்களை பாதுகாக்க வாக்குச்சாவடிகளில் எந்தவித வசதிகளும் செய்யப்படாத நிலையில் அவற்றை வீட்டிலோ அல்லது வாகனத்திலோ வைத்துவிட்டு வாக்களிக்க வரலாம் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close