[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: ஆர்சிபி தொடர் தோல்வி - உன் வாழ்க்கை ஒரு ஐபிஎல்... நீ தான் ஆர்சிபி கடவுள் தான் ரஸ்ஸல்


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 14:37 pm
  • அ+ அ-

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 17-வது போட்டியில் 205 ரன்களை எடுத்தும் கோலியின் ஆர்சிபி அணி வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 பந்துகளை மீதம் வைத்து 206/5 என்று அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஒருகட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்த நிலையில் கொல்கத்தாவின் ரஸ்ஸல் சிக்ஸர்களை விளாசி தனது அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தத் தோல்வி மூலம் ஆர்சிபி 5-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்..

RCB காட்டான்

RCB தோத்தே பழகிட்டானுக.,

நாங்களும் முட்டுக் கொடுத்தே பழகிட்டோம்...

இதுலாம் உங்களுக்குப் புரியாதுடே...

 

CSK கர்ணன்

இப்ப இருக்க ஆர்சிபி டீம தோனி கிட்ட குடுத்தாலும் கப்ப வாங்கி குடுப்பார்டா

இப்ப இருக்க சிஎஸ்கே டீம கோலி கிட்ட குடுத்தாலும் டீம் சரி இல்லனு தான்டா நீங்க பொலம்பணும் ...

SKP KARUNA

நேற்றைய ஆர்சிபி ஆட்டத்தின்போது, தினேஷ் கார்த்திக் அடித்த ரெண்டு சிக்சருக்கே கோஹ்லி தலையில் கை வைத்துக் கொண்ட அந்த ‘உடல்மொழி’ பவுலர், ஃபீல்டர்களை சோர்வடைய வைத்ததோடு, பேட்ஸ்மேனுக்கும் பெரும் உற்சாகம் அளித்தது. அதன் பிறகு ரஸ்ஸல் அடிச்ச சிக்ஸர்லாம் கேப்டன் கோஹ்லி கணக்குலேதான் சேரும்.

N SHARUK

'ஐபிஎல்'லாய் நீ!!

'ஆர்சிபி'யாய் நான்!!!

Chowkidar Dr Nadhas ™

அடுத்த மேட்ச்ல எல்லாம் ஆர்சிபி விக்கெட்டே எடுக்காம பவுலிங் போடும். விக்கெட் எடுத்தா கைய உடைப்பேன்னு சொல்லி அனுப்புவான் கோஹ்லி

வர்மன்

கோலியோட கேப்டன்ஷிப் (இந்தியா) வெற்றி எல்லாம் கூட தோனி களத்திலிருந்து கொடுக்குற ஐடியாவால் தான் போல ..

இந்திய அணியில் தோனி இல்லனா ..கோலியோட கேப்டன்ஷிப்..ஆர்சிபி அணியை போல(வெற்றி) கேள்விக்குறி தான் போல ..

கடவுள்

உன் வாழ்க்கை ஒரு ஐபிஎல்

 நீ தான் ஆர்சிபி

கடவுள் தான் ரஸ்ஸல்..

 

CSK சிலுவை

எல்லாரும் எத்தன மேட்ச் ஜெயிச்சா ப்ளே ஆப் போலாம்ன்னு திங்க் பண்ணுவாங்க ..

பட் ஆர்சிபி இன்னும் எத்தன மேட்ச் தோத்தா வெளியன்னு திங்க் பண்ணுவாங்க போல ..!!

பொன்னியேந்தான்

கோலியின் பரம விசிறி இல்லையென்றாலும் கூட பாக்க ரொம்ப கஷ்டமா இருக்குயா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close