[X] Close

ஈரோடு மக்களவைத் தொகுதி


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 11:46 am
  • அ+ அ-

-நெல்லை ஜெனா

2009-ம் ஆண்டு புதிதாக மலர்ந்த மக்களவை தொகுதிகளில் ஈரோடும் ஒன்று. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தின் தொகுதிகள் பல மக்களவை தொகுதிகளில் சிதறிக் கிடந்தன பெருநகரமான ஈரோடு திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் இடம் பெற்று இருந்தது.

தற்போது ஈரோடு நகரத்தில் உள்ள 2 தொகுதிகளும், மொடக்குறிச்சியும் சேர்த்து, நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தின் காங்கயம், தாராபுரம் தொகுதிகளும் இணைந்து ஈரோடு மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜவுளி நகரமான ஈரோடு, பெருமளவு விவசாயமும் நடைபெறும் பகுதி. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஈரோட்டில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறுகிறது. ஈரோடு மஞ்சளுக்கு நாடுமுழுவதும் மவுசு காணப்படுகிறது. அதனால் தான் ஈரோட்டுக்கு மஞ்சள் நகர் என்ற பெயரும் உள்ளது.

திருச்செங்கோடு தொகுதியாக இருந்தபோதும் சரி, ஈரோடு மக்களவை தொகுதியாக இருந்தபோதும், இங்கு திராவிட கட்சிகளே நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. அதிகமாக அதிமுகவும், அதற்கு அடுத்தபடியாக திமுகவும் இந்த தொகுதியில் வென்றுள்ளன. மதிமுகவும் இந்த தொகுதியில் 2 முறை வென்றுள்ளது.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

ஈரோடு கிழக்கு

ஈரோடு மேற்கு

மொடக்குறிச்சி

தாராபுரம்

காங்கயம்

குமாரபாளையம்

 

தற்போதைய எம்.பி

செல்வகுமர சின்னையா, அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர் வாக்குகள்
அதிமுகசெல்வகுமர சின்னையா466995
மதிமுககணேசமூர்த்தி255432
திமுகபவித்திரவள்ளி217260
காங்கோபி26726

 

முந்தைய தேர்தல்கள்

 

திருச்செங்கோடு

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1977குழந்தைவேலு, அதிமுகமுத்துசாமி, திமுக
1980கந்தசாமி, திமுககுழந்தைவேலு, அதிமுக
1984கண்ணன், அதிமுககந்தசாமி, திமுக
1989கே.சி.பழனிசாமி, அதிமுகபூங்கோதை, திமுக
1991செளந்தரம், அதிமுகராமலிங்கம், திமுக
1996ராமலிங்கம், திமுககுமாரசாமி, அதிமுக
1998பழனிசாமி, அதிமுகராமலிங்கம், திமுக
1999கண்ணப்பன், மதிமுகபழனிசாமி, அதிமுக
2004சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகபழனிசாமி, அதிமுக

 

ஈரோடு தொகுதி

2009கணேசமூர்த்தி, மதிமுகஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

ஈரோடு கிழக்கு : தென்னரசு, அதிமுக

ஈரோடு மேற்கு : ராமலிங்கம், அதிமுக

மொடக்குறிச்சி : சிவசுப்பிரமணி, அதிமுக

தாராபுரம் : காளிமுத்து, காங்கிரஸ்

காங்கயம் : தனியரசு, அதிமுக

குமாரபாளையம் : தங்கமணி, அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

வெங்கு ஜி.மணிமாறன் (அதிமுக)

ஏ.கணேசமூர்த்தி (மதிமுக)

கேசி செந்தில் குமார் (அமமுக)

சரவணக்குமார் (மநீம)

சீதாலட்சுமி நாம் தமிழர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close