[X] Close

சேலம் மக்களவைத் தொகுதி


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 11:48 am
  • அ+ அ-

-நெல்லை ஜெனா

தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகளுக்கு ஆதரவாக இருக்கும் முக்கிய தொகுதிகளில் சேலமும் ஒன்று. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய அமைச்சராக பணியாற்றியவர். பின்னர் பாஜவுக்கு கட்சி மாறிய அவர் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார்.

சேலத்தில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாழப்பாடி ராமமூர்த்தி அதிமுக ஆதரவுடன் வாஜ்பாய் அரசில் அமைச்சரானார். பின்னர் காவிரி பிரச்சினைக்காக அமைச்சர் பதவியை துறந்தார்.

இதுமட்டுமின்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, அதிமுகவின் மூத்த தலைவர்களாக விளங்கிய செல்வகணபதி, செம்மலை என பலரும் எம்.பி.யாக இருந்த தொகுதி. தமிழகத்தில் விஐபிக்கள் விருப்பப்பட்டு களம் இறங்கும் தொகுதியாக சேலம் எப்போதுமே இருந்து வந்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக பரந்து விரிந்து இருந்த இந்த தொகுதி தற்போது சேலம் மாநகராட்சி பகுதிகளுடன், அதனையொட்டிய வீரபாண்டி, எடப்பாடி ஓமலூரை இணைத்து புதிய மக்களவை தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

தேசியக் கட்சியான காங்கிரஸ் இங்கு அதிகமுறை வென்றுள்ளது. இருப்பினும் கூட்டணி பலத்துடனேயே அக்கட்சி வெற்றி வாகை சூடியது. சமீபகாலத்தில் இந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்க திமுக ஆர்வம் காட்டவில்லை. அந்த கூட்டணியில் எப்போதுமே சேலம் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

சேலம் வடக்கு

சேலம் தெற்கு

சேலம் மேற்கு

எடப்பாடி

ஓமலூர்

வீரபாண்டி

 

தற்போதைய எம்.பி

பன்னீர்செல்வம், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகபன்னீர்செல்வம்556,546
திமுகஉமாராணி288,936
தேமுதிகசுதீஷ்201,265
காங்ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்46,477

 

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1977கண்ணன், அதிமுகராஜாராம், திமுக
1980பழனியப்பன், திமுககண்ணன், அதிமுக
1984ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கந்தசாமி, ஜனதா
1989ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கார்த்திகேயன், திமுக
1991ரங்கராஜன் குமாரமங்கலம், காங்அர்த்தநாரிசாமி, திமுக
1996தேவதாஸ், தமாகாதங்கபாலு, காங்
1998வாழப்பாடி ராமமூர்த்தி, சுயேச்சைதேவதாஸ், தமாகா
1999செல்வகணபதி, அதிமுகவாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக ராஜீவ் காங்
2004தங்கபாலு, காங்ராஜசேகரன், அதிமுக
2009செம்மலை, அதிமுகதங்கபாலு, காங்
2009செம்மலை, அதிமுகதங்கபாலு, காங்

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

சேலம் வடக்கு : ராஜேந்திரன், திமுக

சேலம் தெற்கு : சக்திவேல், அதிமுக

சேலம் மேற்கு : வெங்கடாச்சலம், அதிமுக

எடப்பாடி : கே.பழனிசாமி, அதிமுக

ஓமலூர் : வெற்றிவேல், அதிமுக

வீரபாண்டி : மனோன்மணி, அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

கே.ஆர்.எஸ்.சரவணன் (அதிமுக)

எஸ். ஆர். பார்த்திபன் (திமுக)

எஸ்.கே. செல்வம் (அமமுக)

பிரபு மணிகண்டன் (மநீம)

ராஜாஅம்மையப்பன் (நாம் தமிழர்)

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close