[X] Close

சூழல் காப்போம்: அண்டாவுக்கு மாறலாம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 17:43 pm
  • அ+ அ-

-Karthick Krishna_50130

பிளாஸ்டிக் ஒழிப்பு அறிவிப்பு, வரவேற்கத்தக்கது. ஆனால், அரசுடன் ஒப்பிடுகையில் இதில் நாங்கள் முன்னோடி. தடை அறிவிப்பு வருவதற்கு முன்னரே கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை அறிந்தவுடன் எங்கள் வீட்டில் பிளாஸ்டிக்கை வெகுவாகக் குறைத்துக்கொண்டோம். எப்போது வெளியே போனாலும் ஒரு துணிப்பையை எடுத்துக் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

அதனால், திடீரெனப் பொருட்களை வாங்கும்போது கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க முடிந்தது. அதேபோல் எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் தட்டுகளைப் பயன்படுத்துவதே கிடையாது. வீட்டு  விசேஷங்களின்போதோ பூஜை, நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களிலோ நண்பர்களுக்கும் விருந்தினர்களுக்கும் பாக்கு, பனை, தென்னை போன்றவற்றின் மட்டைகளில் செய்யப்பட்ட தட்டுகளைப் பயன்படுத்துவோம்.

அல்லது வாழை இலைகளை வாங்கிக்கொள்வோம். தாவரங்களின் மட்டைகளில் செய்யப்படுபவை  தட்டுகளாக மட்டுமல்லாமல் கப் வடிவிலும் கிடைக்கின்றன. எங்கே கிடைக்கும் எனத் தேடி அலைய சிரமப்படுபவர்கள், ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இவற்றின் விலை பிளாஸ்டிக் தட்டுகளைக் காட்டிலும் குறைவு; ஆரோக்கியமானதும்கூட.

குழந்தைகளுக்குச் சுண்டல் அல்லது நொறுக்குத் தீனிகளைக் கொடுக்க தென்னை மட்டையில் செய்த கப்களைப் பயன்படுத்தலாம். அடிக்கடி வெளியூருக்குப் பயணம் செல்பவர்களாக இருந்தால் இந்த ஆரோக்கியத் தட்டுகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். எங்கள் வீட்டில் பாக்கு, பனை, தென்னை, வாழை இலைகளில் உணவு பரிமாறுவதில் எங்களுக்கு நிறைவு;  விருந்தினர்களுக்கு மகிழ்ச்சி.

- க.ஸ்வேதா, சென்னை.

plastic 2.jpg 

கையாள லகுவாக இருக்கும் என்ற ஒரே காரணத்துக்காகக் குடிநீரை பிளாஸ்டிக் குடத்தில் மாற்றிவிட்டோம். குடிநீர் பிரச்சினை அதிகரிக்க அதிகரிக்க, பிளாஸ்டிக் குடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் குடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதைத் தற்போதுதான் புரிந்துகொண்டேன். எங்கள் வீட்டில் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக இருந்த பிளாஸ்டிக் குடங்களை ஒழித்துவிட்டேன். அவற்றுக்குப் பதிலாகச் செம்பு அண்டாவைப் பயன்படுத்துகிறோம்.

சந்தைக்குச் செல்லும்போது இரண்டு பைகளை எடுத்துக்கொள்வேன். பழங்களை பிளாஸ்டிக் கவரில் வாங்காமல் துணிப் பையில் வாங்குவேன். எவர்சில்வர் தண்ணீர் பாட்டிலைத்தான் பயன்படுத்துகிறோம். நான் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. என்னுடைய மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றி அடிக்கடி எடுத்துச்சொல்லி வருகிறேன். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தால்தான் பெரிய மாற்றங்களைச் சாதிக்க முடியும்.

- குமுதம் ராமசாமி, சின்னியம்பாளையம், ஈரோடு.

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close