[X] Close

மோடிக்கு நற்சான்று பத்திரம்: தேர்தல் ஆணையம் மீது சீதாராம் யெச்சூரி அதிருப்தி


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:35 am
  • அ+ அ-

டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் காத்கோடம் என்ற இடத்துக்குச் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கோப்பைகளில் பிரதமர் மோடியின் சமீபத்திய கோஷமான ‘நானும் காவலாளி’ என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று புகார் எழுந்தது. இதையடுத்து, உடனடியாக, ‘நானும் காவலாளி’ என்று அச்சிடப்பட்ட தேநீர் கோப்பைகளை ரயில்வே நிர்வாகம் வாபஸ் பெற்றது.

இதுகுறித்து ஐஆர்சிடிசியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘ஐஆர்சிடிசியின் அனுமதி இல்லாமல் இது நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய தேநீர் கோப்பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரயிலின் சமையலறை கண்காணிப்பாளர், பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close