[X] Close

சிதறும் முஸ்லிம் வாக்குகள்: சாதுர்ய வாக்களிப்பு கைகொடுக்குமா?


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 09:47 am
  • அ+ அ-

-ஆதி வள்ளியப்பன்

பிப்பெட்: வணக்கம் பியூ. பரீட்சையெல்லாம் நீ நல்லா எழுதியிருப்பேன்னு தெரியும்.

பியூரெட்: ம், நல்லா எழுதியிருக்கேன். அடுத்த வருஷம் பத்தாம் வகுப்புக்குப் போயிடுவேன். நீ எப்படி எழுதினே?

பிப்.: நமக்குப் படிப்பெல்லாம் பெரிய பிரச்சினையே இல்ல. எப்பவுமே ரொம்ப சூப்பரும் கிடையாது, ரொம்ப சுமாரும் கிடையாது.

பியூ.: ஆனா, அறிவியல்ல நம்மள அடிச்சுக்க முடியாதே.

பிப்.: நாம போன வாரம் சந்திச்சுக்காததுனால, நான் படிச்ச வேதியியல் புத்தகத்துல இருந்து சுவாரசியமான அம்சங்களை எடுத்து வாசகர்கள்கிட்ட பகிர்ந்துக்கிட்டேன்.

பியூ.: ஆமா ஆமா, நானும் படிச்சேன். அருமையா இருந்துச்சு. எப்படி இருந்தாலும் இந்த வாரத்தோட நாமளும் விடைபெறப் போறோம்.

பிப்.: அப்படியா! ஏன் இவ்வளவு சீக்கிரமா முடிக்கணும்?

பியூ.: சீக்கிரமா எல்லாம் இல்ல, ஆறு மாசமா பல்வேறு வேதித் தனிமங்களைப் பத்தி நாம பேசியிருக்கோமே.

பிப்.: ஆனா ஹைட்ரஜன்ல தொடங்கி ஓகனெஸ்ஸன்வரை 118 தனிமங்கள் உலகத்துல இருக்கே.

பியூ.: சரியாச் சொல்றியே. உலகத்துல 118 தனிமங்கள் இருக்கிறது என்னவோ உண்மைதான். அதுல 94 தனிமங்கள் மட்டும்தான் இயற்கைல கிடைக்குது, தெரியுமா?

பிப்.: அப்ப மத்த 24 எப்படி வந்துச்சு?

பியூ.: எல்லாமே ஆய்வகத்துலயோ அணு உலைகள்லயோ செயற்கையா தயாரிச்சவை.

பிப்.: ஓ, அப்படியா? சரி, செயற்கையா தயாரிக்கப்பட்ட   24-யை விட்டுடுவோம். மீதி 94 இருக்கே.

பியூ.: அவற்றையெல்லாம் பேசி முடிக்கணும்னா ரெண்டு வருசம் ஆயிடும் பிப். இந்தத் தொடர்ல 20 முக்கியத் தனிமங்களைப் பத்தி விரிவா நாம பேசியிருக்கோம்.

பிப்.: ஆமா, அதேநேரம் மனித உடல்ல இருக்குற தனிமங்களைப் பத்தியும் தனிம உலக சுவாரசியங்கள் பத்தியும்கூட விரிவா பேசியிருக்கோமே.

chemistry 23.jpg

பியூ.: நமக்கு நல்லாத் தெரிஞ்ச ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற அதிகம் பேசப்படுற தனிமங்களைப் பத்தி இந்தத் தொடர்ல நாம பார்க்கல. அந்தத் தனிமங்களைப் பத்தித்தான் ஏற்கெனவே நமக்கு நிறையத் தெரியுமே, திரும்ப அவற்றையெல்லாம் எதுக்குப் பேசணும்?

பிப்.: நீ சொல்றது சரிதான். எப்படிப் பார்த்தாலும் 30 தனிமங்களைப் பத்திப் பேசியிருப்போம்.

பியூ.: மூணுல ஒரு பங்கு இயற்கையான தனிமங்களைப் பத்திப் பேசியிருக்கோம். அறிவியலோ அதன் ஒரு பிரிவான வேதியியலோ, ரெண்டுமே ரொம்பக் கஷ்டம் கிடையாதுன்னு இந்தத் தொடரைப் படிச்சவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

பிப்.: நிச்சயமா, உலகத்துல எந்த விஷயமும் கஷ்டமானது கிடையாது. எந்தக் கடினமான விஷயத்தையும் புரிஞ்சுக்கக்கூடிய திறமை மனுசங்களுக்கு இருக்கு. அப்படிப் புரிஞ்சுக்கிட்டவங்க, மத்தவங்களுக்கு எளிமையா விளக்கிச் சொன்னாலே போதுமே. இந்தத் தொடர்ல நீ எனக்கு அப்படித்தானே பல விஷயங்கள விளக்கிச் சொன்ன.

பியூ.: நீயும் ஒண்ணும் குறைஞ்ச ஆள் இல்ல பிப். நீ ஆர்வமா நிறைய கேள்வி கேட்டிருக்க, ஏற்கெனவே சொன்ன விஷயங்களை ஞாபகம் வெச்சு நினைவுபடுத்திச் சொல்லிருக்க, நீயும் நிறைய இதுக்காகத் தேடித் தேடிப் படிச்சியே.

பிப்.: உன்னை மாதிரி டீச்சர்களும் வாத்தியார்களும் விளக்கிட்டாங்கன்னா, எல்லோருக்குமே நல்லாப் புரிஞ்சிடும்.

பியூ.: ஆமா பிப். நாம ஒரு புள்ளி வெச்சுக் காட்டியிருக்கோம். இது ஒரு தொடக்கம்தான். நம்ம மாணவர்களும் ஒண்ணும் சாதாரணப்பட்டவங்க இல்ல.

பிப்.: கோடு போட்டுக் காட்டினா, ரோடே போட்டுடுவாங்க நம்ம மாணவர்கள்.

பியூ.: பிரபல ரஷ்ய வேதியியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையைக் கண்டறிஞ்ச 150-வது ஆண்டான 2019-யை ஐ.நா. சபை ‘தனிம வரிசை அட்டவணை ஆண்டா’ கொண்டாடுது.

பிப்.: அதையொட்டித்தானே இந்தத் தொடரை நாம ஆரம்பிச்சோம்.

பியூ.: 1869-ல மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையை உருவாக்குனப்ப, பல வேதித் தனிமங்கள் கண்டறியப்பட்டிருக்கவே இல்ல. பல இடங்களைக் காலியா விட்டுத்தான் தனிம வரிசை அட்டவணையை அவர் உருவாக்குனாரு. தனக்குப் பின்னாடி வர்ற விஞ்ஞானிகள் அந்த இடங்களுக்கு உண்டான தனிமங்களைக் கண்டறிவாங்கன்னு அவர் நம்புனாரு.

பிப்.: அதே மாதிரி, இந்த வருசத்துல மிச்சம் இருக்குற 9 மாசங்கள்லயும் டிமிட்ரி மெண்டலீவ் பத்தியும் மற்ற வேதித் தனிமங்களைப் பத்தியும் நம்ம மாணவர்களும் ஆசிரியர்களும் தேடித் தெரிஞ்சுக்குவாங்கன்னு நம்புறேன்.

பியூ.: தனிமங்கள் இல்லாம, தனிமங்களைப் பத்தின அறிவு-ஆராய்ச்சி இல்லாம இந்த உலகம் எதுவும் இல்ல.

பிப்.: சுருக்கமா சொல்லணும்னா, வேதியியல் இல்லாம நம்ம அன்றாட வாழ்க்கை ஒரு செ.மீ.கூட நகராது!

‘அன்றாட வாழ்வில் வேதியியல்' தொடரில் விரிவாக பேசப்பட்ட தனிமங்கள்:

டைட்டானியம், கோபால்ட், ஸ்ட்ரான்சியம், பாதரசம், மக்னீசியம், நைட்ரஜன், ஹீலியம், ஃபுளூரின், அயோடின், குளோரின், துத்தநாகம், நியான், ஸெனான், சிலிக்கான், எர்பியம், போரான், லித்தியம், பொட்டாசியம், தகரம், இரிடியம்.

 

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close