[X] Close

கள நிலவரம்: கரூர் தொகுதி யாருக்கு?


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 21:06 pm
  • அ+ அ-

புதுடெல்லியில் நாளை நடைபெறும் 12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் இளங்காளைகள் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்ட சிஎஸ்கே அணி.

இதற்கு முன் நடந்த 11 ஐபிஎல் போட்டிகளில் பலம் வாய்ந்த சிஎஸ்கே அணியை வீழ்த்தும் அளவுக்கு சரியான கலவையில் உள்ள வீரர்கள் கொண்ட டெல்லி அணியாக இருந்ததில்லை. ஆனால், இந்த முறை சிஎஸ்கே அணிக்கு அனைத்து விதத்திலும் சவால் விடுக்கும் வகையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அமைந்திருக்கிறது.

டெல்லி  பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தைப் போல், மோசமான ஆடுகளம், சொத்த பிட்ச் அல்ல. பேட்ஸ்மேன்களுக்கு நன்கு  ஒத்துழைக்கும் மைதானமாகும்.

dc team.jpg 

சேப்பாக்கத்தில் நடந்த முதல் ஆட்டத்தைப் போல் ஆர்சிபி 70 ரன்ககளும், அதைசேஸிங் செய்த சிஎஸ்கே 17 ஓவர்கள் எடுத்துக்கொண்டதைப் போல் இந்த சொத்தையாக ஆடுகளம் இருக்காது. டெல்லி ஆடுகளம் தரமாக அமைக்கப்பட்டு இருப்பாதல், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் முற்றிலும் இளமையும், துடிப்பும் கொண்ட வீரர்களைக் கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்தமண்ணில் புரட்டி எடுத்து முதல் வெற்றியை டெல்லி அணி பதிவு செய்துள்ளது.

குறிப்பாக ரிஷப்பந்த் 'பவர் ஹிட்டிங் ஷாட்கள்' மும்பை வீரர்களை அதிர்ச்சி அடையவைத்தது. 27 பந்துகளில் 78 ரன்களை குவித்து ரிஷப்பந்த் அசத்தினார். ரிஷப்பந்தின் காட்டடி ஆட்டத்துக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் என்ன பாடுபடப் போகிறார்களோ தெரியவில்லை.

rabada.jpg 

தொடக்க வீரர்களாக களமிறங்கும் ஷிகர் தவண், பிரித்வி ஷா அருமையாக தொடக்கத்தை அளிக்கக்கூடியவர்கள். இதில் பிரித்விஷா முதல் போட்டியில் வாய்ப்பை தவறவிட்டாலும், சிஎஸ்கே அணிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தால், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் பாவம்.

அடுத்து களமிறங்கும் ஸ்ரேயாஸ் அய்யர், கோலின் இன்ங்க்ராம், கீமோ பால், ஹனுமா விஹாரி ஆகியோரின் அதிரடியும் காத்திருக்கிறது. ஆகவே பேட்டிங்கில் சிஎஸ்கே அணிக்கு எந்தவிதத்திலும் குறையாத அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி இருக்கிறது.

பந்துவீச்சில் மணிக்கு 150-கிமீ வேகத்தில் வீசி மும்பையை திணறடித்த ரபாடா, நியூசிலாந்தின் டிரன்ட் போல்ட், வலிமையான இசாந்த் சர்மா ஆகியோரின் கூட்டணி சிஎஸ்கேவுக்கு நிச்சயம் மிரட்டலாக இருக்கும். இதுதவிர சுழற்பந்துவீச்சுக்கு அமித் மிஸ்ரா, அக்ஸர் படேல் ஆகியோர் இருக்கிறார்கள்.

இவை அனைத்தையும்விட டெல்லி கேபிடல் அணிக்கு தங்களின் சொந்த மண்ணில் போட்டி நடப்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இருப்பதும் மிகப்பெரிய  பலமாகும்.

cc.jpg 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை தோனிதான் அனைத்தும் தோனிதான் பலம். இந்த அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்கிற விமர்சனம் எழுந்தபோதிலும் தங்களின் அனுபவத்தால் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ராயுடு, வாட்ஸன், ரெய்னா, கேதார் ஜாதவ், தோனி, ரவிந்திர ஜடேஜா, பிராவோ என அச்சுறுத்தும் பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகப்பெரிய பலம். ஆனால், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது சற்று கடினம்தான்.

பந்துவீச்சில் டெல்லி அணியோடு ஒப்பிடும்போது, நிச்சயம் சிஎஸ்கே அணி பலவீனமானவர்களே. சேப்பாக்கம் ஆடுகளம் தரமற்றதாக, குழிப் 'பிட்சாக' இருந்ததால், ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் பந்துகள் எளிதாக 'ட்ர்ன்' ஆகின. ஆனால், டெல்லியில் உள்ள ஆடுகளத்தில் பந்துகளை நன்றாக 'டர்ன்' செய்வதற்கு இவர்கள் சிறிது சிரமப்பட வேண்டியது இருக்கும்.

cs.jpg 

ஏனென்றால், சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து ஹர்பஜன் கூட, என்னுடைய பந்து இந்த அளவுக்கு 'டர்ன்' ஆகியதைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது என்று தெரிவித்திருந்தார். மேலும் வேகப்பந்துவீச்சில் சிஎஸ்கேயில் ரன்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு வலிமையான பந்துவீச்சு இல்லை.

மோகித் சர்மா, தீபக் சாஹர், ஷத்துல் தாக்கூர், பகுதிநேர பந்துவீச்சாளர்கள் பிராவோ, வாட்ஸன் என இருந்தாலும், எதிரணிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கும், அச்சுறுத்தும் அளவுக்கும் பந்துவீசபவர்கள் இல்லை. பேட்டிங்கில் மட்டுமே சிஎஸ்கே வலிமையாக இருக்கிறதே தவிர பந்துவீச்சில் இல்லை என்பதே நிதர்சனம்.  அனுபவமான வீரர்கள் இருந்தாலும், இளம் வீரர்களைக் கொண்ட அணியிடம் சிறிது எச்சரிக்கையாகவே சிஎஸ்கே இருக்க வேண்டும்.

போட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close