[X] Close

மண் கவ்வி தர்த்தி பக்கட்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:53 am
  • அ+ அ-

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடைபெறும் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இதில் தெலங்கானா மாநிலம், சேவெல்லா நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளாராக மனு தாக்கல் செய்த கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி என்பவர் தான் இது வரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் பணக்கார வேட்பாளராவார்.

இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ. 895 கோடியாகும். இதில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 223 கோடி, இவரது மனைவி சங்கீதா ரெட்டியின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 613 கோடியாகும். இவர் அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.

இவர்களது மகனின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 20 கோடியாகும். இந்த குடும்பத்துக்கு கார் போன்ற எவ்வித மோட்டார் வாகனங்களும் இல்லை என சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close