[X] Close

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 15:21 pm
  • அ+ அ-

கஜா புயலைப் பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்ததாகக் கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் ஆதாரம் கேட்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

முன்னதாக, கே.எஸ்.அழகிரி நாளிதழ் ஒன்றில் அளித்திருந்த பேட்டியில், கஜா புயல் தாக்கியதுபோல் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவில்லை ஆனால் ராகுல் காந்தி வந்தார். ராகுல் காந்தி ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பேசியதும் நாகர்கோயிலில் பேசியதும் அவருக்கு ஆதரவைப் பெற்றுத்தந்துள்ளது. இதை நாங்கள் வாக்குகளாக மாற்றுவோம் எனக் கூறியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "கஜாபுயல் பாதிப்பை பார்வையிட மோடி ஜி வரவில்லையென விமர்சனம் செய்யும் கே.எஸ்.அழகிரி அவர்கள் ராகுல்காந்தி கஜா புயலை பார்வையிட வந்தார் என்று கூறி பொய்பிரச்சாரம் செய்கிறார்.

ராகுல்காந்தி கஜாபுயலை பார்வையிட எங்கே,எப்போது வந்தார் என்ற செய்தியையும்,புகைப்படத்தையும் ஆதாரமாக வெளியிடமுடியுமா?" என ட்விட்டரில் வினவியுள்ளார்

 தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான் என்று கூறிய பிரதமர் மோடி தனது ட்விட்டர் ஹேண்டிலில் சவுகிதார் நரேந்திர மோடி என பெயர் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து தமிழக பாஜகவினரும் தங்களது பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்பதை இணைத்துள்ளனர்.

அந்த வகையில் தமிழிசை சவுந்தரராஜனும் தனது ட்விட்டர் ஹேண்டில் பெயரை Chowkidar Dr Tamilisai Soundararajan என மாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close