[X] Close

கியா மோட்டார்ஸின் சிக்னேச்சர்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 11:20 am
  • அ+ அ-

கோவா மாநிலம் மபுசாவில், 1955-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மனோகர் பாரிக்கர் பிறந்தார். சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்த இவர், 1978-ல் மும்பை ஐஐடியில் உலோகவியலில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வடக்கு கோவா பிரிவில் பணியாற்றிய அவர், ராம் ஜென்மபூமி இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.

பின்னர் பாஜகவில் இணைந்த பாரிக்கர், 1994-ல் கோவா சட்டப்பேரவை உறுப்பினரானார். இதன் மூலம் ஐஐடி பட்டதாரி ஒருவர் கோவா மாநிலத்தில் எம்எல்ஏ-வாக தேர்வான முதல் நபர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 1999-ல் ஜூன் முதல் நவம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 2000-ம் ஆண்டு முதல் முறையாக கோவா முதல்வரானார். அடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். பாஜகவின் வெற்றிகரமான முதல்வர்களில் ஒருவராக பாரிக்கர் விளங்கினார். எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். முடிவு எடுப்பதில் திறமையானவர்.

கோவா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிக அளவில் இருந்தபோதும், அங்கு பாஜக ஆட்சி அமைய பாரிக்கர் முக்கிய காரணமாக இருந்தார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, 2013-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பாஜக மாநாட்டில், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாரிக்கர் முன்மொழிந்தார்.

இதன் காரணமாக, 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து உத்தரபிரதேசம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். எனினும், 2017-ல் நடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவை பாஜக நாடியது.

எனினும், பாரிக்கரை முதல்வராக்கினால் ஆதரவு தருவதாக அந்தக் கட்சிகள் நிபந்தனை விதித்தன. இதையடுத்து, பாரிக்கர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் கோவா முதல்வரானார். கடந்த ஆண்டு அவருக்கு புற்று நோய் இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அமெரிக்கா மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

பாரிக்கரின் மனைவி மேதாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2001-ம் ஆண்டு உயிரிழந்தார். இவர்களுக்கு உத்பால், அபிஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close