[X] Close

அரக்கோணம் தொகுதி


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 11:08 am
  • அ+ அ-

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் உள்ளிட்ட 8 கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில் மார்க் சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என 6 தொகுதி களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். திமுக வட்டா ரங்களில் கிடைத்த தகவலின்படி, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தூத்துக்குடி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு பெரும்புதூர், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா நீலகிரி (தனி), முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன் - மத்திய சென்னை, எஸ்.ஜெகத்ரட்சகன் அரக்கோணம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சாவூர், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் கள் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வட சென்னை, தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை, க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கடலூர், பொங்க லூர் பழனிசாமியின் மருமகன் கோபாலகிருஷ்ணன் பொள் ளாச்சி ஆகியோரும் போட்டி யிடுவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.

காஞ்சிபுரம் (தனி), திருவண் ணாமலை, சேலம், தருமபுரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கு பலரது பெயர் கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வும் கூறப்படுகிறது.எனவே, 20 மக் களவைத் தொகுதிகள் தவிர இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட் டப்பேரவைத் தொகுதிகளுக் கான வேட்பாளர்களையும் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close