[X] Close

வடசென்னையின் மாஃபியா அடையாளத்தை மாற்றுவேன்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா பேட்டி


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 18:09 pm
  • அ+ அ-

இரட்டை இலை வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தது. 

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டிடிவி தினகரன் தரப்பில் 4 விதமான கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும். இரண்டாவதாக டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 3வதாக இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்., நான்காவது குக்கர் சின்னத்தை இடைக்கால நிவாரணமாகத் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தங்கள் மேல்முறையீட்டு மனுவில் கோரியுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்காக இந்த மனு காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தது.  இன்னமும் வழக்கு விசாரணைப் பட்டியலில் பட்டியலிடப்படவில்லை என்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அவசரம் கருதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் மனுதாரர்கள் சார்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த நிவாரணம் 14ம் தேதி வரை உள்ளது என்றார். அதாவது பிரஷர் குக்கர் சின்னத்தை 15 நாட்கள் வரையில் யாருக்கும் ஒதுக்கக் கூடாது., அதாவது மார்ச் 14ம் தேதி வரை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதனையடுத்து மார்ச் 15ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ஆகவே மார்ச் 15ம் தேதிதான் டிடிவி தினகரன் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமா என்பது தெரியவரும். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close