[X] Close

பிளஸ் 2-வுக்குப் பிறகு: லட்சியத்துக்குப் பின்னால் லட்சங்கள் வரும்!


2

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 12:00 pm
  • அ+ அ-

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவில் முக்கிய வைபவமான தேரோட்ட மும், மக்களவைத் தேர்தலும் ஒரே நாளில் அதாவது ஏப். 18-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 7-ம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 15-ம் தேதியும், மீனாட்சியம்மன் திக் விஜயம் 16-ம் தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17-ம் தேதியும் நடக்கிறது.

இத்திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. அதிகாலை 5.45 மணிக்கு தொடங்கும் தேரோட் டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில் சித்திரைத் திரு விழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் நடைபெறும் ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். தேர்தல் நடப்பதால் வெளியூர்களில் வசிப் போர் மதுரையில் நடக்கும் தேரோட்டத்துக்கு வர முடியாத நிலை ஏற்படும்.

இது குறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜனிடம் கேட்டபோது,

எங்களைப் பொறுத்தவரை குறித்த தேதியில் தேரோட்டம் நடக்கும். திருக்கல்யாணம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட விஷயம். தேர்தலுக்காக மாற்றி அமைக்க வாய்ப்பே இல்லை என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close