[X] Close

நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும் நவீன பொருளாதாரம்!


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 12:18 pm
  • அ+ அ-

பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பு மூலம் வாக்குகளைக் கவர, அதிமுக திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மின்வாரியம் கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளில் பல ஆண்டுகளாக காலிப் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் இருந் தன. மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு அவசரம் காட்டி வருகிறது. இதற்கான அறிவிப்புகளை தற் போது வெளியிட்டு வருகிறது. அதேபோல், சில பணியி டங்களுக்கு அவசர, அவசரமாக நேர்காணல் நடக்கிறது.

பலருக்கு வேலை வாய்ப் பளித்தால் தங்களுக்கு வாக் களிப்பர் என அரசுத்தரப்பு கணக்கிட்டுள்ளது. ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோரிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. தற்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், வேலைக்காக விண்ணப்பித்தோர் விரக்தியில் உள்ளனர். அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு சிறிய தேர்வை நடத்தி காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது ஆதரவையும் பெற அதிமுக அரசு முயற்சித்து வருவதாக சிவகங்கையைச் சேர்ந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close