[X] Close

மாஸ் காட்டும் எர்டிகா ஸ்போர்ட்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 11:42 am
  • அ+ அ-

பிட்லீ

அசினுக்குப் பிறகு பிரியாமணி, எமி ஜாக்ஸன், ராய் லட்சுமி, தமன்னா, காஜல் அகர்வால் என்று அரை டஜன் ஹீரோயின்கள் இந்தியில் நடிக்கப் போனார்கள். இவர்களின் டாப்ஸி மட்டும் இதுவரை தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் இந்தி சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

பிரியாமணியைத் தவிர மற்றவர்கள் இன்னும் ‘கலைமாமணி’ வாங்கவில்லை என்பது ஆறுதல்!

கஞ்சா, ஆபாசம் என்று சர்ச்சை கிளப்பியும் ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. கண்கலங்கிய தயாரிப்பாளரைத் தேற்ற சிம்புவிடம் பேசி, உடன் நடிக்கச் சம்மதிக்க வைத்திருக்கிறார் ஹன்சிகா. ஏற்கெனவே பழகிய பழைய ஜோடி லண்டன் ஷூட்டிங்கில் மறுபடி சிறகடிக்கப் போகிறது.

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்...

‘ஐபிசி 376’ படத்தில், காவல் துறைஅதிகாரியாக நடித்து வருகிறார் நடிகை நந்திதா. சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் துணிச்சலுடன் நடித்துவரும் அவரைப் பார்த்து, ‘ஒரு நாயகி உதயமாகிறாள்’ என்று பாட்டு பாடுகிறது யூனிட்.

இரண்டாம் விஜயசாந்தியே வருக!

டி.ஆரின் இளையமகன் குறளரசனின் திருமணம் சென்னையில் ஏப்ரல் 26-ம் தேதி நடக்கவிருக்கிறது. முஸ்லிம் பெண்ணைக் காதலிப்பதைத் தெரிந்துகொண்ட டி.ஆர்., பெண் வீட்டாரிடம் பேசி மகனின் மதமாற்றத்திற்குப் பச்சைக்கொடி காட்டி நிக்காஹ் தேதியை உறுதி செய்திருக்கிறார்.

டி.ஆரின் இன்னிசை கச்சேரி உண்டுங்களா?

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘பேய் மாமா’ படத்தின் அறிவிப்பு மட்டும்தான் வந்திருக்கிறது. ஏற்கெனவே ஷங்கரின் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டு பாதியில் வெளியேறிய வடிவேலு, வேறு படங்களில் நடிப்பதானால் ஷங்கருக்கு பல கோடி தர வேண்டும். எனவே, சமாதானம் பேச ரஜினியை அணுகியிருக்கிறார் வைகை புயல்.

வடிவேலுக்காவது வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி?

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close