[X] Close

நேருவின் கடைசித் தேர்தல்


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 09:09 am
  • அ+ அ-

நாக்பூர் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஏரோன் பிஞ்ச் இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார், இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் என்று ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவான ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த பிட்ச் ஸ்பின்னுக்கு ஆதரவாகச் செயல்படும் என்பதால் ஏரோன் பிஞ்ச் தன் அணியில் நேதன் லயன், ஆடம் ஸாம்ப்பா இருவரையும் வைத்துக் கொண்டுள்ளார். ஏற்கெனவே கிளென் மேக்ஸ்வெல் 5 ஓவர்களை வீசி 20 ரன்களுக்கு ஷிகர் தவண் (21) விக்கெட்டைக் கைப்பற்ற, இன்னொரு ஸ்பின்னர் நேதன் லயன், அம்பதி ராயுடு (18) விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 

தற்போது விராட் கோலி 47 ரன்களுடனும் அவருடன் விஜய் சங்கர் 15 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். 

முன்னதாக முதல் ஓவரின் கடைசி பந்தில் கமின்ஸ் வைத்த ஷார்ட் பிட்ச் பொறியில் சிக்கி ரோஹித் சர்மா தேர்ட்மேனில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். ஷிகர் தவண், கமின்ஸை இரண்டு அற்புத பவுண்டரிகளுடன் 4 பவுண்டரிகள் அடித்து 21 ரன்கள் எடுத்த நிலையில் புல்ஷாட் ஆட முடியாத பந்தை ஆடப்போய் மேக்ஸ்வெலிடம் எல்.பி.ஆனார். 

அம்பாதி ராயுடு, கோலி எதிர்முனையில் நிற்கும்போது ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய தெரியாமல் 32 பந்துகள் ஆடி 18 ரன்களில் லயனின் அருமையான பந்துக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். 

ஆஸ்திரேலிய பவுலர்கள் டைட்டாக வீசி வருகின்றனர். ஆனால் விராட் கோலி கூறியது போல் போகப்போக இந்தப் பிட்ச் இன்னும் ஸ்லோ ஆகி ஸ்பின் எடுக்கும் போது ஆஸ்திரேலியா ஒருவேளை முதலில் பவுலிங் செய்ததை நினைத்து வருந்த நேரிடலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close