[X] Close
 

நெட்டிசன் நோட்ஸ்: மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி தேவை


netizen-notes

  • இந்து குணசேகர்
  • Posted: 13 Apr, 2018 14:32 pm
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு அச்சிறுமி அதேபகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றிம் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

ai Ganesh

வன்புணர்வுகளின்

நாவுகள் நீண்டு கொண்டிருக்கின்றன

கூரிய நகங்கள்

பிஞ்சு வேர்களை

கிழித்தெறிகின்றன

குருதி குடித்த ஓநாய்கள்

வாசம் தேடி

வீதிகளெங்கும்

அலைகின்றன

ஒழுக்கங்களை

போதித்த

கடவுள்கள் எல்லாம்

கூட கண்மூடிக் கிடக்கின்றன

விதைத்தவைகளை

அறுத்தெறியும்

வன்மங் கொண்டவைகளை

துடைத்தெறிவோம்

Azhagunila Panchaksharam

பிறக்காத பெண் குழந்தைகளுக்கு கையாலாகாத ஒரு தாயின் வேண்டுகோள்

தேவதைகளே பிறப்பெடுக்காதீர்கள்

நீங்கள் விளையாட இருக்கும் களங்களில் ஓநாய்கள் உலாவுகின்றன

நீங்கள் பூப்பறிக்க இருக்கும் தோட்டங்களில் கள்ளிகள் முளைத்திருக்கின்றன

நீங்கள் நீந்த இருக்கும் கடலில்

முதலைகள் காத்திருக்கின்றன

நீங்கள் பறக்க இருக்கும் வானில்

வல்லூறுகள் வட்டமிடுகின்றன

நீங்கள் உறங்க இருக்கும்

படுக்கையில் முட்கள் முளைத்திருக்கின்றன

உங்களை அணைக்க இருக்கும் கரங்களில் அமிலங்கள் சுரக்கின்றன

தினம் தினம் வஞ்சிக்க காத்திருக்கும் கடவுள்களின் அலட்சியத்தால் தவறி

நீங்கள் பிறக்க நேர்ந்தால்

மறக்காமல் உங்கள் யோனிகளை கருவறையில் விட்டுவிட்டு வாருங்கள்

Vasuki Umanath

அசீஃபாவுக்கு நியாயம் கேட்போம். சே.. என்ன உலகம் இது! மனிதம் மறந்து போனதா, மரத்து போனதா? 8 வயது குழந்தையை ஒரு வார காலம் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த குற்றவாளிகள் (துணை போன காவலர்கள் உட்பட)தண்டனை பெற வேண்டும். குற்றவாளிகள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்களை வன்மையாக கண்டிப்போம். குழந்தை பிற்படுத்தப்பட்ட இசுலாமிய குடும்பம் என்பதால் பலி/பழி வாங்க பட்டிருக்கிறாள் என்பதாக செய்திகள் வருகின்றன. பாரதமாதா வெறும் பார்வையாளர் தானா?

Rafeeq Sulaiman

தயவு செய்து அந்த ஆட்சியில் நடக்கவில்லையா? இந்த ஆட்சியில் நடக்கவில்லையா?? என்று ஒரு சிறுமியின் உயிரை உடலை, கிஞ்சிற்றும் இரக்கமின்றி சிதைத்த மாபாதகனின் செயலுக்கு அரசியல் முட்டுகொடுக்காதீர்கள்..ப்ளீஸ்.

அது அந்த மாபாதகனின் செயலைக்காட்டிலும் கொடியது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென்று இருக்கும் ஒரு துறையின் அமைச்சராக இருக்கும் அந்த பெண், இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குத் தரும் பதிலைப்பாருங்கள்....வெட்கித் தலைகுனிவீர்கள்.

கண்ணீர் கண்களை மறைக்கிறது...

Bhavani Maniyan

மதத்தின் பெயரால் ஒரு கொடூர சம்பவம் நடைபெறும் போது, ஆதரிப்பது, கள்ள மவுனம் காப்பது இரண்டுமே ஒன்றுதான். என் வீட்டில் நடைபெறாத வரை பாதுகாப்பு என நினைப்பது ஆகச் சிறந்த மூடத்தனம். பிரதமர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்... வன்மையாக கண்டிக்கிறேன்...

#justiceforasifa

Suresh Subha

ஓர் ஆணாக அவமானத்தில் என் தலை குனிகிறது.

அசிஃபா எட்டு வயதுச் சிறுமி. அவளுக்கு நேர்ந்ததை மகளைப் பெற்ற எந்தத் தந்தையாலும் தாங்க முடியாது.

FIR விவரங்களைப் படிக்கையில் தானாக ரத்தக்கொதிப்பு வருகிறது. கண்கள் நனைகின்றன. இதயம் பிசையப்படுகிறது. மாபெரும் மரியாதை தந்து, பெண்களை தெய்வங்களாக மதித்த இந்த தேசத்திலா இந்த அவலம்?

ஓர் ஆணாக அவமானத்தில் என் தலை குனிகிறது.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அவர்களை எப்படி மன்னிக்க இயலும்..? உண்மையிலேயே, குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசியக்கொடி பிடித்து 'பாரத் மாதாக்கி ஜே' என்று கோஷம் வேறா?

'மாதா' என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட இவர்களுக்கு ஏது அருகதை?

ஓர் ஆணாக அவமானத்தில் என் தலை குனிகிறது.

இந்த மிருகங்களை (வேண்டாம், மிருகங்களை ஏன் அவமானம் செய்ய வேண்டும்..?) - இந்த மனிதமற்ற உயிரினங்களை வேட்டையாட துர்கைகளும், காளிகளும், மகிஷாசுர மர்த்தினிகளும் களம் புகவேண்டிய தருணம் வந்துவிட்டது.

(நான் பார்த்துப் பதைத்த புகைப்படங்களைப் பதிவு செய்ய மனம் வரவில்லை.)

Vinayagamoorthy Gunasekar

அந்த முகம் உங்களை சிறிது கூட சாந்தப்படுத்தவில்லையா கயவர்களே... அந்த கண்களின் சிரிப்பு, அந்த கண்களின் வெகுளி உங்களை காலம் முழுக்க துயரப்படுத்தி கொல்லும் ..

Ramesh Babu S

 எனக்கு ஒன்றை நிரூபித்து போனதற்கு நன்றி ஆசிஃபா

#கடவுள் இல்லை கடவுள் இல்லை

Sankar

அரபு நாட்டில் உள்ள கடுமையான சட்டங்களை,இந்தியாவிலும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்... #தூக்குதண்டனை..

மாயோன்

 எவ்வளவு பெரிய அட்டூழியத்தையும் நியாயப்படுத்த ஒரு கூட்டம் இருக்கிறது என்பதைவிட மனிதகுலத்திற்கு வேறென்ற கேவலம் வேண்டும்?

90'Z KIDZ ONLY

இதுபோல எத்தனையோ Asifaக்கள் தினமும் சொல்லாலும் செயலாலும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர்.இறந்தால்தான் அவர்களுக்கும்  நீதியோ? #JusticeforAsifa

கார்த்திக் தமிழன்

‏தாய்ப்பாலில் காமத்தை  தேடும் கயவர்கள்  மத்தியில்  வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...

vadi

 மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் ஆசிஃபாவிற்கு மதமில்லை என்று

துஷ்டா

மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி தேவை #JusticeForAsifa

செல்வமணி

‏அன்றும் இன்றும் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை எனில்

இந்த சட்டமும் அரசும் நமக்கானது அல்ல

CSK இம்ச‏

 இந்த எட்டு பேருக்கும் தையல் மிஷின் குடுப்பாங்க அப்புறம் தலா பத்தாயிரம் குடுப்பாங்க. இந்த தண்டனையால குற்றம் செய்றவன் பயந்து நடுங்குவான். அதுனால இனிமே குற்றமே நிகழாது. #JusticeforAsifa

RAVI PALANISAMY

 எனது கடவுள் நம்பிக்கை பொய்த்து போகிறது. ஒரு பெண் குழந்தையின் தகப்பானாக இந்த சமூகத்தின் மீது அவ நம்பிக்கை ஏற்படுகிறது. #JusticeforAsifa

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


[X] Close