[X] Close

 ’ஒரு கைதியின் டைரி’ படத்துக்கு அவரே சூப்பரா சீன் சொன்னாரு; அப்புறம் அதுவேணாம்னு அவரே சொல்லிட்டாரு! – பாக்யராஜ் குறித்து சித்ரா லட்சுமணன் பெருமிதம்


bhagyaraj-chitra-lakshmanan

இயக்குநர் கே.பாக்யராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Feb, 2019 22:04 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘’ஒரு கைதியின் டைரி’ படத்துக்கு அவரே சூப்பரான சீன் சொன்னாரு.  அப்புறம் சாயந்திரம், அந்த சீன் வேணாம்னு வேறொரு சீன் சொன்னாரு. அது அதைவிட பத்துமடங்கு பிரமாதமா இருக்கும்’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேசினார்.

சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சித்ரா லட்சுமணன் பேசியதாவது:

பாக்யராஜை எனக்கு அப்பலேருந்தே தெரியும். நல்ல பழக்கம். பாரதிராஜா சார்கிட்ட எனக்கு சீனியர் அஸிஸ்டென்ட் அவர். இன்னிக்கி, இந்தியாவிலேயே மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியரா பாக்யராஜ் இருக்கார்னா, அதுக்கு அவரோட கடுமையான உழைப்புதான் காரணம்.

‘ஒரு கைதியின் டைரி’ கதை பண்ணும்போது, அவரோடயே பத்துநாளுக்கு மேல டிஸ்கஷன்ல ஒண்ணா இருந்த அனுபவம் மறக்கவே முடியாது. பாக்யராஜ் சொல்ற ஒவ்வொரு காட்சியுமே அப்படியே கண்ல ஒத்திக்கிற மாதிரி இருக்கும். ஏதோ… நேர்ல படம் பாக்கற மாதிரியே சொல்லுவாரு. அதேபோல ஒவ்வொரு சீனும் அவ்ளோ பிரமாதமா சொல்லுவாரு.

அப்படித்தான் ஒருநாள் காலைல டிஸ்கஷன்ல பாக்யராஜ் ஒரு சீன் சொன்னாரு. நாங்க எல்லாருமே பிரமிச்சுப் போயிப் பாத்தோம். அப்புறம் மத்தியான டைம் வந்துச்சு. எல்லாரும் சாப்பிட்டோம்.

பாக்யராஜ்கிட்ட ஒரு பழக்கம். மத்தியானம் சாப்பிட்டு முடிச்சதும், ஒருமணி நேரம் தூங்குவாரு. தூங்கி எந்திரிச்சதும் திரும்பவும் டிஸ்கஷன் வேலை ஆரம்பிப்பாரு.

அப்படித்தான் தூங்கி எந்திரிச்சாரு பாக்யராஜ். ‘காலைல ஒரு சீன் சொன்னேன்ல. அதுவேணாம். இந்த சீன் எப்படி இருக்குன்னு பாருங்க’ன்னு வேற ஒரு சீன் சொன்னாரு.இத்தனைக்கும் காலைல அவர் சொன்ன சீன் கேட்டு, எல்லாரும் வியந்துபோயிருந்தோம். ஆனாலும் வேற ஒரு சீன் சொல்றேன்னு சொன்னார் பாக்யராஜ். ரெண்டாவதா அவர் சொன்ன சீன், பத்துமடங்கு பிரமாதமா இருந்துச்சு. இதான் பாக்யராஜ். இதான் அவரோட மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம். அதனாலதான் அமிதாப் மாதிரி மிகப்பெரிய நடிகர்கள் கூட பாக்யராஜை இன்னிக்கி வரைக்கும் கொண்டாடிட்டிருக்காங்க.

இவ்வாறு சித்ரா லட்சுமணன் பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close