[X] Close

’எஜமான்’ படத்துல ரெண்டு பாட்டு;   ராஜா சார் எனக்காக போட்ட மெட்டு – மனம் திறந்த பாக்யராஜ்


bhagyaraj-ilayaraaja-ejaman-song

எஜமான் - ரஜினி, மீனா

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Feb, 2019 20:14 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘நிலவே முகம் காட்டு’ பாட்டும், ‘ஒருநாளும் உனை மறவாத…’ பாட்டும் என் படத்துக்காக டியூன் போட்டீங்க. ஆனா ‘எஜமான்’ படத்துக்கு கொடுத்துட்டீங்க’ என்று இளையராஜாவிடம் மனம் விட்டு தெரிவித்தார் கே.பாக்யராஜ்.

இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி, தனியார் சேனலில் ஒளிபரப்பானது. இதில் நடிகைகள் சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, பானுப்ரியா, அருணா முதலான நடிகைகள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் கலந்துகொண்டார்.

அப்போது இளையராஜாவிடம் பாக்யராஜ் தெரிவித்ததாவது:

என்னுடைய படங்களுக்கு நல்ல நல்ல பாட்டுகளா எத்தனையோ போட்டுக்கொடுத்திருக்கீங்க. எல்லாமே செம ஹிட்டாகி, இன்னிக்கும் எல்லாராலயும் ரசிக்கப்பட்டுக்கிட்டிருக்கு.

அப்படி ஒருதடவை, ரெண்டு டியூன் போட்டீங்க. அந்த ரெண்டு டியூனுமே ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ஆனா, அந்தப் படத்துல பயன்படுத்த முடியாமப் போச்சு. உடனே நான் உங்ககிட்ட, ‘இந்த ரெண்டு டியூனையும் பத்திரமா ‘நோட்’ பண்ணி வைச்சுக்கோங்க. அடுத்த படத்துல நாம இந்த ரெண்டு டியூனையும் பயன்படுத்திக்குவோம்னு சொன்னேன்.

உடனே சரின்னு சொன்ன நீங்களும், இந்த ரெண்டு டியூனையும் குறிச்சி வைச்சிக்கிட்டீங்க. ஆனா, அப்புறமா உங்களைப் பாக்க வந்தப்ப, ‘எஜமான்’ பட கம்போஸிங் நடந்துக்கிட்டிருந்துச்சு. அந்தப் படத்துக்கு நான் பத்திரமா வைச்சிருங்கன்னு சொன்ன ரெண்டு டியூனையும் கொடுத்துட்டீங்க. ‘நிலவே முகம் காட்டு’ பாட்டும் ‘ஒருநாளும் உனை மறவாத…’ பாட்டும்னு ரெண்டு டியூனையும் ஆர்.வி.உதயகுமாருக்கு கொடுத்துட்டீங்க.

 ‘நான்தான் அடுத்த படத்துல பயன்படுத்திக்கலாம், பத்திரமா வைச்சிருங்க’ன்னு சொன்னேனே… நீங்க எப்படி எஜமான் படத்துக்குக் கொடுக்கலாம்’னு உங்ககிட்ட கேட்டேன். ஞாபகம் இருக்கா சார்.

இவ்வாறு கே.பாக்யராஜ் கேட்க, சிரித்துக் கொண்டே ஆமோதித்தார் இளையராஜா.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close