[X] Close

‘சிவாஜி அண்ணனுக்கு கம்மியான டயலாக்கா?’ மகேந்திரனின் ‘தங்கப்பதக்கம்’ நினைவுகள்


sivaji-mahendran

தங்கப்பதக்கம் - சிவாஜி

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Feb, 2019 18:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘சிவாஜி அண்ணனுக்கு கம்மியான டயலாக்கா?’ என்று டைரக்டர் மாதவன் அதிர்ந்துபோய்விட்டார் என்று தங்கப்பதக்கம் பட நினைவுகளை இயக்குநர் மகேந்திரன் பகிர்ந்துகொண்டார்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் முதலான படங்களை இயக்கிய மகேந்திரன், அந்தப் படங்களுக்கு முன்னதாக நிறைகுடம், தங்கப்பதக்கம் முதலான படங்களுக்கு கதை எழுதியும் கதை வசனம் எழுதியும் பணியாற்றி இருக்கிறார்.

தங்கப்பதக்கம் பட அனுபவங்களை, ஓர் தனியார் சேனல் பேட்டியில் தெரிவித்தார் மகேந்திரன்.

அப்போது அவர் கூறியதாவது:

‘தங்கப்பதக்கம்’ முதலில் டிராமாவாகத்தான் வந்தது. அதைப் பார்த்துவிட்டு, ‘இந்த டிராமாவை நான் போடுறேன்னு சிவாஜியண்ணன் சொன்னாங்க. சிவாஜி சாரை நான் அண்ணன்னுதான் கூப்பிடுவேன். அதுக்குப் பிறகு தமிழ்நாடு முழுக்க தங்கப்பதக்கம் டிராமா போட்டு செம பாப்புலராச்சு.

அப்புறம், ஒருநாள், ‘இதை படமாப் பண்ணலாம்’னு சொன்னார் சிவாஜியண்ணன். பட வேலைகளும் ஆரம்பிச்சு ஷூட்டிங் போயிட்டிருந்துச்சு. அப்ப சிவாஜியண்ணன், ‘மகேன்… நாளைக்கி முக்கியமான சீன் ஷூட் பண்றோமில்லியா. டயலாக்கெல்லாம் அசத்திரு என்ன?’ன்னு சொல்லிட்டுப் போனார். என்னை மகேந்திரன்னு கூப்பிடமாட்டார். மகேன் மகேன்னுதான் கூப்பிடுவாரு சிவாஜியண்ணன்.

ஆனா எனக்கு பக்கம்பக்கமா வசனம் பேசுறதுல உடன்பாடு இல்ல. என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ‘சரி, நாம நினைச்சபடி எழுதுவோம். பிடிக்கலைன்னு சொன்னா, அவங்க எதிர்பார்த்தபடி எழுதிக்குடுத்துருவோம்’னு முடிவு பண்ணினேன்.

மறுநாள். டயலாக் பேப்பரைப் பாத்துட்டு, டைரக்டர் மாதவன் சார் டென்ஷனாயிட்டார். ‘என்னய்யா இது. சிவாஜி சாருக்கு டயலாக்கை கொடுத்து ஆக்ட் பண்ண வைச்சு அசத்தலா பண்ணிடலாம்னு நினைச்சேன். இப்படி கம்மியான வசனம் வைச்சிருக்கீங்களே’ன்னு புலம்பிட்டார்.

இதுக்கு இடைல, சிவாஜியண்ணனுக்கு இந்த விஷயமெல்லாம் சொல்லிட்டாங்க. என்னைக் கூப்பிட்டுவிட்டாரு. எங்கே சீன் சொல்லுன்னு சொன்னாங்க. முழுக்க சொன்னேன். ரொம்பப் பிடிச்சுப் போச்சு சிவாஜியண்ணனுக்கு.

‘மாதவா. மகேன் சொல்றமாதிரி இந்த சீன் வைச்சிருங்க’ன்னு சொன்னாங்க. கே.ஆர்.விஜயா இறந்து கிடப்பாங்க. அப்போ எல்லாரும் வந்திருப்பாங்க. சிவாஜியண்ணன் ஸ்டேஷன்லேருந்து வர்ற லேட்டாகியிருக்கும். உள்ளே வரும் போது அவரோட யூனிபார்ம் சட்டையை கழற்றுவாரு. அப்படியே மாடி ஏறுவாரு. உள்ளே ரூமுக்கு வருவாரு. இறந்து கிடக்கிற கே.ஆர்.விஜயாவுக்குப் பக்கத்துல நிப்பாரு. ’லக்ஷ்மி… நான் வந்து ரொம்பநேரமாச்சு. ஏன் ஒண்ணுமே பேசமாட்டேங்கிறே?’ன்னு கேப்பாரு.

’நான் யூனிஃபார்ம்ல இருந்தாத்தான் எங்கிட்ட பேச பயப்படுவே. இதோ பாரு… யூனிஃபார்ம் இல்லாம இருக்கேன்’னு சொல்லுவாரு. அடுத்து ‘பேசும்மா. நான் நேரம் கழிச்சு வருவேன். நீ எனக்காகக் காத்துக்கிட்டிருப்பே. இப்போ நான் சீக்கிரமே வந்திருக்கேன். நீ தூங்கிட்டியே! நான் என்னம்மா தப்பு பண்ணினேன். ஏம்மா போயிட்டே? என்னை தனிமரமா நிக்கவைச்சிட்டுப் போயிட்டியேம்மா. என்னால தாங்கமுடியலம்மா’ன்னு சொல்லிட்டு கதறுவாரு. தியேட்டர்ல பாத்த ரசிகர்கள் கலங்கிப்போயிட்டாங்க. சிவாஜியண்ணன் கூப்பிட்டுப் பாராட்டினார். இதையெல்லாம் மறக்கவே முடியாது.

இவ்வாறு மகேந்திரன் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close