[X] Close

‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ – போஸ்ட் கார்டு பாட்டு; கவிஞர் வாலி ஞாபகங்கள்


vaali-tms

கவிஞர் வாலி - டி.எம்.எஸ்.

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Feb, 2019 20:14 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ஒருமுறை கவிஞர் வாலியிடம் புஷ்பவனம் குப்புசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று, தனியார் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது முதல் பாடல் வாய்ப்பு எப்படி வந்தது என்று புஷ்பவனம் குப்புசாமி கவிஞர் வாலியிடம் கேட்டார்.

அதற்கு கவிஞர் வாலி கூறியதாவது:

ஊர்ல, திருச்சில, ஸ்ரீரங்கத்துல டிராமா போட்டுட்டிருந்தேன். சினிமால வசனம் எழுதணும்னுதான் நினைச்சிட்டிருந்தேன். பாட்டு எழுதணும்னெல்லாம் நினைச்சதே கிடையாது.

அப்பலாம், சென்னை மாதிரி நம்மூர்ப்பக்கம் டிராமா போடமுடியாது. பாட்டெல்லாம் வேணும். டிராமாவுக்காக பாட்டு எழுதினேன். அப்படியே அது பழக்கமாச்சு.

அப்போ, திருச்சி ஆல் இண்டியா ரேடியோல, அப்பப்ப நிகழ்ச்சியெல்லாம் பண்ணிட்டிருந்தேன். ஒருமுறை, டி.எம்.எஸ். அங்கே வந்தார். அதுவொரு பொங்கல் நிகழ்ச்சி. அவருக்காக, அவர் பாடுறதுக்காக ‘நிலவுக்கு முன்னே நீ வரவேண்டும், நீ வந்தபின்னே நிலவதெற்கு வேண்டும்’னு எழுதிக் கொடுத்தேன். அதுக்கு ஒரு ராகம் போட்டு பாடினார்.

அப்புறம் எங்கிட்ட, ‘இவ்ளோ திறமையை வைச்சிக்கிட்டு ஏன் திருச்சிலயே இருக்கீங்க. எருமை மாட்டை தண்ணில வைச்சிக்கிட்டு விலை பேசமுடியாதே. வாங்க சென்னைக்கு’ன்னு கூப்பிட்டார். ஆனா என்னால உடனே சென்னைக்குப் போகமுடியல.

ஒரு போஸ்ட்கார்டுல பாட்டு எழுதி டி.எம்.எஸ்.க்கு அனுப்பிவைச்சேன். ‘இந்தப் பாட்டை நீங்க பாடினா, ரொம்ப சந்தோஷப்படுவேன்னு எழுதி அனுப்பினேன். அவரும் அந்தப்  பாட்டைப் பாடினார். அந்தப் பாட்டுதான், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாட்டு!

அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்தேன். முதல் பாட்டு எழுதினேன். பி.சுசீலா பாடினாங்க. ஆனாலும் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாட்டை மறக்கவே முடியாது!

இவ்வாறு தன் நினைவுகளை புஷ்பவனம் குப்புசாமியிடம் பகிர்ந்துகொண்டார் கவிஞர் வாலி.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close