[X] Close

ஒரு தெருவே குழம்பு விக்குது!


kulambu-sales

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 18:21 pm
  • அ+ அ-

பட்டறைத் தெரு, சித்திரக்காரன் தெரு, கொல்லப் பட்டறைத் தெரு, வளையல்காரத் தெரு, நகைக்கடைத் தெரு இப்படியெல்லாம் தொழிலின் பெயரைக் கொண்டு அமைந்த தெருக்கள் உண்டு. சேலத்திலோ ஒரு தெருவையே குழம்பு தெரு என்று கூறும் அளவுக்கு, 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் குழம்பு விற்கிறார்கள்.

கொஞ்சம் ஆச்சரியமாய் இருக்கிறதா? சேலம் குகை பகுதியில் வீட்டுக்கு வீடு, குழம்பு, காய்கறி  பொரியல், கூட்டு, காளான், காளிஃபிளவர் வருவல் மற்றும் அசைவ வகைகளை பாத்திரத்தில் நிரப்பி வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.

அப்பகுதியில் குழம்பு கடை நடத்தும் செந்தில்குமார்-நிஷா தம்பதியை அணுகினோம். "காலையில் அவசரமாய் வேலைக்குச் செல்வோர், சாப்பாடு மட்டும் வைத்துவிட்டு, குழம்பு, பொரியல், அசைவ வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இதேபோல, எதிர்பாராமல் வந்துவிட்ட விருந்தாளிகளைச் சமாளிக்கவும் இவை உதவுகின்றன.

சேலத்துக்கே உரித்தான பிரத்யேக சைவ, அசைவ குழம்பு வகைகள், பொரியல், இறைச்சி வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இங்கு மட்டும் 40 வீடுகளில்  குழம்பு விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும் 100-க்கும்  மேற்பட்டோர் வாங்குவதால், கணிசமான வருவாயும் கிடைக்கிறது.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, புளிக் குழம்பு, காளான் குழம்பு, தட்டைப்பயிர் கூட்டு, உருளைக்கிழங்கு பொரியல், மீல்மேக்கர் வருவல், பிரட் மசாலா, பருப்பு சாம்பார், ரசம், மோர், சுண்டல் உள்ளிட்ட சைவ வகைகள் ரூ.20-க்கு விற்கப்படுகின்றன.

மட்டன் வறுவல், பிரியாணி, கதம்பம், ரத்தப்  பொரியல், போட்டி வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா,  சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு ஆகியவை ரூ.30 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது.  இரண்டு பேர் சாப்பிடக் கூடிய அளவு சாதம், இரண்டு வித குழம்பு, இரண்டு வித பொரியல், ஒரு கூட்டு, ரசம், மோர் அப்பளம் சேர்த்து ரூ.50-க்கு விற்கிறோம்.

இது வீட்டு சமையல் என்பதால், தரமான மசாலா, மளிகைப் பொருட்களையே பயன்படுத்துகிறோம். இவை உடலுக்கு தீங்குவிளைவிக்காதவை. எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர்களும் நிறைய உண்டு" என்றனர் பெருமிதத்துடன்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close